சின்ஜியாங் பற்றிய வெளிநாட்டு ஊடகங்களின் செய்திகளுக்கு சீனா மறுப்பு

வான்மதி 2019-11-29 19:15:29
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் அமைப்புகள், சின்ஜியாங்கின் ரகசிய ஆவணம் என்ற பெயரில் சின்ஜியாங் மேற்கொண்டுள்ள தொழில் திறன் பயிற்சி பற்றிய தகவல்களை தீவிரமான முறையில் விளம்பரப்படுத்தி, பயங்கரவாத எதிர்ப்பு, தீவிரவாத ஒழிப்பு ஆகிய துறைகளில் சின்ஜியாங் பெற்றுள்ள சாதனைகளை அவமானப்படுத்த முயன்றுள்ளன. உண்மையைப் புறக்கணித்து, சின்ஜியாங்கின் பல்வேறு இன மக்கள் சமூக உறுதிநிலை மற்றும் நிரந்தர அமைதியை நனவாக்கும் வகையில் மேற்கொண்டுள்ள முயற்சிகள் பற்றி அவதூறாகப் பேசியது ஆத்திரமூட்டும் செயலாகும்.

2018ஆம் ஆண்டின் இறுதி முதல் இதுவரை 90க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1000க்கும் அதிகமானோர் சின்ஜியாங் தொழில் திறன் பயிற்சி மையத்தைப் பார்வையிட்டுள்ளனர். அதன் உண்மையான நிலைமை பற்றி சீன மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன. இம்மையம், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மனித உரிமை பாதுகாப்புக்கான ஐ.நாவின் கோட்பாடு மற்றும் கொள்கைக்கு முழுமையாகப் பொருந்தியுள்ளது. அது பாராட்டப்பட வேண்டியது என்றும் கற்றுக்கொள்ளவும் வேண்டியது என்றும் நெடுநோக்கு பார்வையுடையவர்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டப்படி பயங்கரவாதத்தை ஒடுக்குவது, பாதுகாப்பு தொடர்பாக சின்ஜியாங் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்துள்ளதோடு சமூக இணக்கம் மற்றும் அமைதியையும் பேணிக்காத்துள்ளது. பொது மக்களின் மனநிறைவு, மகிழ்ச்சி மற்றும் பாதுகாப்புணர்வு இதனால் பெரிதும் உயர்ந்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்