வணிக உரிம சீர்திருத்தம் பற்றி லீக்கெச்சியாங் முக்கிய உரை

ஜெயா 2019-12-03 09:57:34
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சோதனை முறையிலான பன்முக வணிக உரிம சீர்திருத்தம் பற்றிய காணொலிக் கூட்டம் டிசம்பர் 2ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இச்சீர்திருத்தம் தொடர்பான பணிக்கு சீன தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் முக்கிய உத்தரவு வழங்கினார். அவர் கூறுகையில், இச்சீர்திருத்தமானது, நிர்வாகத்தை எளிதாக்குதல், அதிகாரத்தை அளித்தல், சேவையை உயர்த்தல் ஆகியவற்றை ஆழமாக்கி, வணிகச் சூழலை மேம்படுத்தி, சந்தையின் ஆற்றலை வளர்ப்பதற்குரிய முக்கிய நடவடிக்கையாகும். கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் வணிகச் சூழல் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு, உலக அளவில் பெரிதும் உயர்ந்துள்ளது. ஆனால், சர்வதேச முன்னேறிய நிலையை விட, பற்றாக்குறைகள் இன்னும் உள்ளன. சந்தை, சட்டம் மற்றும் சர்வதேசமயமான வணிகச் சூழல் கட்டுமானத்தைத் தொடர்ந்து முன்னேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்