சீனாவின் வெளிநாட்டுத் திறப்புப் பணி கொண்டு வரும் வாய்ப்பு

2019-12-26 19:19:29
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் தொடக்கம், ஒரு பகுதிப் பொருட்களின் மீதான இறக்குமதி சுங்க வரியைச் சரிப்படுத்துவதற்குரிய அறிவிப்பைச் சீன அரசவை சுங்க வரி ஆணையம் அண்மையில் வெளியிட்டது. இது பற்றி, சீன வணிக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் 26ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், சீனா சந்தையை மேலும் திறந்து வைப்பதற்கான நடவடிக்கை இதுவாகும் என்றும், உயர் தரப் பொருட்களின் இறக்குமதியை விரிவாக்குவதற்கு இது துணை புரியும் என்றும் தெரிவித்தார். திறப்பு என்பது, சீனாவின் சொந்த வளர்ச்சிக்கும், உலகின் நலன்களுக்கும் திறவு கோலாகும்.

வெளிநாட்டுத் திறப்பு நடவடிக்கையின் தூண்டுதலுடன், 2019ஆம் ஆண்டு சீனப் பொருளாதாரம் சீரான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இவ்வாண்டின் முதல் 11 திங்களில், சீனாவின் சரக்கு வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை, 28 லட்சத்து 50 ஆயிரம் கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 2.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதனால், வர்த்தக வல்லரசான சீனாவின் தகுநிலை மேலும் வலுப்பட்டுள்ளது. அதே வேளையில், சீனா உண்மையாக பயன்படுத்திய அன்னிய முதலீடு, 84 ஆயிரத்து 594 கோடி யுவானை எட்டியது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6 விழுக்காடு அதிகமாகும்.

வெளிநாட்டுக்குத் திறப்பை விரிவுபடுத்தி வரும் சீனா, பன்னாடுகளுக்கு மேலதிக நலன்களைக் கொண்டு வந்துள்ளது. சுங்க வரியைக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள், பன்னாடுகளுக்கு மாபெரும் சந்தையைத் திறந்து வைத்துள்ளன. ஏற்றுமதி மூலம், சீனா பன்னாடுகளுக்கு தரமான விலை மலிவான அதிக பொருட்களை வழங்கி வருகிறது. சீனாவின் வெளிநாட்டு முதலீடு, உபசரிப்பு நாடுகளுக்கு அதிக வேலை வாய்ப்பையும், வரி வருவாயையும் தந்துள்ளது.

சீனா சந்தை திறப்பைத் தொடர்ந்து விரிவாக்கி, வணிகச் சூழலை மேம்படுத்தி, பலதரப்பு ஒத்துழைப்பை ஆழமாக்கி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணியை முன்னேற்றி, உலகப் பொருளாதாரத்துக்கு நம்பிக்கையையும் இயக்கு ஆற்றலையும் உட்புகுத்தும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்