சின்ச்சியாங் பிரச்சினை பற்றி மேலை நாட்டு செய்தி ஊடகத்தின் புலனாய்வு

2019-12-27 19:04:50
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவுக்கு எதிரான நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள், சீனாவின் சின்ச்சியாங் பிரச்சினையில் போலித் தகவல்களை உருவாக்கி, சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் வழிமுறையை கிரேசோன் எனும் அமெரிக்காவின் செய்தி இணையத் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை வெளிப்படுத்தியுள்ளது. இக்கட்டுரை, சின்ச்சியாங் பிரச்சினையின் உண்மையை சர்வதேச சமூகம் அறிந்து கொள்வதற்குரிய வாய்ப்பை வழங்குவதோடு, சீனாவுக்கு எதிரான சில மேலை நாட்டு சக்திகள் கள்ளத்தனமாக கூட்டுச் சேர்ந்து, சீனாவைத் தாக்கும் கெட்ட செயலையும் இது வெளிப்படுத்தியுள்ளது.

கிரேன் சோன் எனும் செய்தி இணையத் தளத்தின் பதிப்பாசிரியர் மெக்ஸ் புலுமென்டலும் கனடா எழுத்தாளர் அஜித் சிங்கும் கூட்டாக எழுதிய புலனாய்வு அறிக்கையில், சீனாவின் சின்ச்சியாங்கில், “லட்சக்கணக்கான முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டது”பற்றி மேலை நாட்டு செய்தி ஊடகங்களில் அடிக்கடி காணப்படும் செய்திக்கு உரிய ஆதாரம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மேலை நாடுகளின் முக்கிய செய்தி ஊடகங்கள் சீனாவை அவமானப்படுத்தி வரும் பின்னணியில், செய்தி இணைய தளமான கிரே சோன் உள்ளபடியாகவும் சீராகவும் புலனாய்வு செய்து, உண்மையை வெளியிட்ட செயல் மதிப்பு மிக்கது.

சீனாவுக்கு எதிரான மேலை நாட்டு சக்திகள், பல்வகை வழிமுறைகளைப் பயன்படுத்தி, பன்னாட்டு மக்கள், சீனச் சமூகத்தின் உண்மை நிலைமை பற்றி அறிந்து கொள்வதைத் தடுக்க முயல்கின்றன. ஆனால், உலகமயமாக்கம் மற்றும் தகவல்மயமாக்கம் வளர்ந்து வரும் தற்காலத்தில், அவர்களின் எண்ணம் நனவாகாது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்