சின்ச்சியாங் கல்வி பற்றி நியூயார்க் டைம்சின் போலியான கட்டுரை

2019-12-31 10:23:44
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சின்ச்சியாங்கின் குழந்தைகளை உண்டுறைப் பள்ளிக்கு அனுப்பி, அவர்களைப் பெற்றோரிடமிருந்து பிரித்து, தேசிய இன மொழிக்குப் பதிலாக சீன மொழியைப் பயன்படுத்தி, நாட்டுப்பற்று கல்வியை நடைமுறைப்படுத்த சீன அரசு நிர்பந்திப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாள் அண்மையில் வெளியிட்ட கட்டுரையில் தெரிவித்தது. இந்த கட்டுரையில் போலியான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதோடு, கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்களுக்கு உரிய ஆதாரமும் இல்லை.

2019ஆம் ஆண்டு எமது நிகழ்ச்சியில் விமர்சகர்கள் சின்ச்சியாங்கின் நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள துவக்கப் பள்ளிகளுக்குச் சென்று, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாடினர். குழந்தைகள் பள்ளிகளில் சீன மொழி மற்றும் உய்கூர் மொழியில் பாடம் படித்ததையும், பாடத்துக்கு அப்பால் இவ்விரு மொழிகளில் தொடர்பு கொண்டதையும் கண்டனர். இது தென் சின்ச்சியாங்கின் பள்ளிகளில் காணப்படும் அன்றாட வாழ்க்கை காட்சியாகவும் சின்ச்சியாங்கின் செழுமை மற்றும் நிதானத்துக்கான முன்மாதிரியாகவும் இருக்கின்றது. ஆனால், நியூயார்க் டைம்ஸ் எனும் செய்தித்தாளே உண்மைக்குப் புறம்பான செய்திகளைக் கொண்டு கட்டுரையை வெளியிட்டுள்ளது.

சின்ச்சியாங்கின் நிலப்பரப்பு, பிரிட்டனின் நிலப்பரப்பைப் போன்று சுமார் 7 மடங்கு பெரியதாகும். உள்ளூர் பிரதேசத்தில் உண்டுறை பள்ளி அமைப்பு முறையை நடைமுறைப்படுத்துவது, சின்ச்சியாங் தன்னாட்சிப் பிரதேச அரசு, உண்மை நிலைமைக்கிணங்க, கல்வி மூலம் வறுமையை ஒழிக்கும் மாதிரியாகும். இது, உள்ளூர் பிரதேசத்தின் பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

எமது நிகழ்ச்சியின் விமர்சகர்கள், சின்ச்சியாங்கில் பயணம் மேற்கொண்ட போது கிடைத்த தகவல்களின்படி, சின்ச்சியாங் முழுவதிலும் உள்ள இடைநிலை மற்றும் துவக்கப் பள்ளிகளில் 7 மொழிகளில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. உள்ளூர் மக்கள் 5 மொழிகளில் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கேட்டு, கண்டு ரசித்து, பல மொழிகளிலான வெளியீடுகளைப் படிக்க முடியும். மேலும், சீன மொழி, சீனாவின் பொது மொழியாகும். உள்நாட்டின் மாணவர்கள், சீன மொழியைக் கற்றுக் கொள்வது, இயல்பான ஒன்றாகும்.

வெறும் கட்டுக் கதையை உருவாக்குவதன் மூலம், உண்மையை மறைத்து விட முடியாது. அதே போன்று, சீனாவின் வளர்ச்சியிலிருந்து எந்த ஒரு தேசிய இனமும் நன்மை பெறும் என்பதையும் மறுதலிக்க முடியாது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்