​மத்திய கிழக்கு நிலைமை தீவிரமாகிய காரணி:ஆயுத ஆற்றல்

தேன்மொழி 2020-01-04 15:56:40
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஈராக்கில் அமெரிக்கா 2-ஆம் நாள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரான் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்படையின் குஸ் படைப்பிரிவு தளபதி காசிம் சோலைமானி உயிரிழந்ததாக அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் அதே நாள் இரவு தெரிவித்தது. இது உலகளவில் பெரும் அதிரவை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, அமெரிக்காவை பழி வாங்குவோம் என்று ஈரானின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி தெரிவித்தார்.

ஆயுத ஆற்றலைப் பயன்படுத்துவது, வெறுப்பையும் பழி வாங்கும் எண்ணத்தையும் மட்டுமே ஏற்படுத்தும். பிரச்சினைகள் தீராமல் இருக்கும் நிலையில், ஆயுதத்தைப் பயன்படுத்துவது இப்பிரதேசத்தின் நிலைமையை மேலும் தீவிரமாக்கும் என்பதை மத்திய கிழக்குப் பிரதேசத்தில் நீண்டகாலமாக நடைபெறும் மோதல்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போட்டி, வெளிப்படையான மோதல் என்ற திசை நோக்கி தீவிரமாகியுள்ளதை அமெரிக்காவின் தாக்குதல் காட்டுகின்றது. இதனால் மத்திய கிழக்குப் பிரதேசம் மேலும் பதற்றமான சூழ்நிலைக்கு ஆளாகும் என்பதில் ஐயமில்லை.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்