புதிய யுகத்தில் சீன-மியன்மார் உறவின் வளர்ச்சி திசை

2020-01-18 18:50:45
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 17ஆம் நாள் சீன-மியன்மார் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம், சீன-மியன்மார் பண்பாடு மற்றும் சுற்றுலா ஆண்டு ஆகிய நிகழ்ச்சிகளின் துவக்க விழாவில் உரை நிகழ்த்துகையில், புதிய யுகத்தில் சீன-மியன்மார் உறவை முன்னேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது உரை, புதிய யுகத்தில் சீன-மியன்மார் உறவின் வளர்ச்சிக்குப் புதிய திசையைக் காட்டியுள்ளது.

சீன, மியன்மார் மக்களுக்கிடையேயான நட்பார்ந்த பரிமாற்றம், ஆயிரத்துக்கும் அதிகமான ஆண்டுகள் நீடித்து வருகிறது. குறிப்பாக சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின், ஒத்துழைப்பு மேற்கொண்டு ஒன்றுக்கொன்று பயனளிக்கும் மாதிரியை இரு நாட்டு பரிமாற்றமும் நிலைநாட்டியுள்ளது.

2020ஆம் ஆண்டு, சீனாவும் மியன்மாரும் புதிய வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற பொறுப்பை எதிர்நோக்கி உள்ளன. குறிப்பிட்ட வசதியான சமூகத்தைப் பன்முகங்களிலும் உருவாக்கும் இலக்கை சீனா நனவாக்கும். மியன்மாரில் புதிய சுற்றுத் தேர்தல் நடைபெற உள்ளது. நாட்டின் வளர்ச்சி மற்றும் கட்டுமானம், புதிய காலக் கட்டத்தில் நுழைய உள்ளது. இந்தப் பின்னணியில், இரு நாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 70ஆம் ஆண்டு நிறைவை வாய்ப்பாகக் கொண்டு, இரு தரப்புறவின் புதிய யுகத்தைத் திறந்து வைப்பது, பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.

சீன-மியன்மார் உறவு புதிய காலக் கட்டத்தில் நுழைந்து, இரு தரப்புப் பொது எதிர்கால சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் உரையில் சுட்டிக்காட்டினார். இந்த முக்கிய அரசியல் பொதுக் கருத்து, இரு தரப்புறவின் எதிர்கால வளர்ச்சித் திட்டத்தை பன்முகங்களிலும் விவரித்து, இரு நாடுகள் ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தி, பன்முக ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கும், கூட்டு வளர்ச்சியை நனவாக்குவதற்கும் மேலும் உறுதியான அரசியல் அடிப்படையிடும் என்பதில் ஐயமில்லை.

இரு நாட்டுறவு புதிய காலத்தில் நுழைவதுடன், இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களை முக்கிய இடத்தில் வைக்க வேண்டும். புதிய கட்டத்தில் இரு நாட்டுப் பொது மக்களுக்கும் நன்மை கொண்டு வர வேண்டுமானால், எதார்த்த ஒத்துழைப்பை விரிவாக்கி, மனித பண்பாட்டுப் பரிமாற்றத்தை நெருக்கமாக்க வேண்டும் என்று அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.

சீன-மியன்மார் பண்பாடு மற்றும் சுற்றுலா ஆண்டு நிகழ்ச்சியின் துவக்கத்துடன், கல்வி, மதம், ஊடகம், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பும் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை விரிவாக்குவது, இரு தரப்பு நாகரீக மற்றும் மனிதத் தொடர்பை விரைவுபடுத்தும் என்பது உறுதி.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்