புதிய யுகத்தில் சீன-மியன்மார் உறவு வளர்ச்சிக்கான மூன்று இயக்காற்றல்

2020-01-18 19:36:48
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 17ஆம் நாள் மியன்மார் தலைநகர் நெய்பிடாவில் அந்நாட்டு அரசுத் தலைவர் வின் மின்ட்டைச் சந்தித்த போது, தனது பயணம் மூலம் மூன்று தகவல்களை வெளிப்படுத்த விரும்புகின்றேன் என்று தெரிவித்தார்.

முதலில், மியன்மார் அரசு மற்றும் மக்கள், சொந்த நாட்டின் நிலைமைக்குப் பொருந்திய வளர்ச்சிப் பாதையில் காலடியெடுத்து வைப்பதையும், நாட்டின் வளர்ச்சியை முன்னேற்றுவதையும் சீன அரசு மற்றும் மக்கள் உறுதியாக ஆதரிக்கின்றனர்.

இரண்டு, சீன-மியன்மார் பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவுக்கு ஆழ்ந்த அடிப்படையை இட்டுள்ளது. இந்நிலையில் இரு நாட்டு பொது எதிர்கால சமூகத்தைக் கூட்டாக உருவாக்குவது, இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கு புதிய இயக்கு ஆற்றலை வழங்கும்.

மூன்று, மியன்மாருடனான எதார்த்த ஒத்துழைப்ப முன்னேற்றி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவை, மியன்மாரின் வளர்ச்சி நெடுநோக்குத் திட்டத்துடன் இணைப்பதை விரைவுபடுத்தி, இரு நாட்டு மக்களுக்கு நன்மைகளைக் கொண்டு வந்திட வேண்டும்.

நட்புறவை விரைவுபடுத்தி, ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தி, ஒத்துழைப்பை ஆழமாக்குவதன் மூலம், இரு நாட்டுறவு புதிய யுகத்தில் புதிய உயிராற்றலை வெளிக்கொணர்ந்து, இரு நாட்டு மக்களுக்கும் நன்மை அளிப்பதுடன், பிரதேசம் மற்றும் உலகின் அமைதி மற்றும் வளர்ச்சியையும் விரைவுபடுத்த வேண்டும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்