தாவோஸ் ஆண்டுக்கூட்டத்தில் சீனக் குரல் மீதான எதிர்பார்ப்பு

2020-01-23 16:10:01
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மூன்று ஆண்டுகளுக்கு முன், ஸ்விட்சர்லாந்தின் தாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரை நிகழ்த்திய போது, பொருளாதாரத்தின் உலகமயமாக்கத்தை உறுதியாக ஆதரிக்கிறேன் என்று தெரிவித்தார். இவ்வுரை உலகளவில் முக்கிய செல்வாக்கு ஏற்படுத்தியது. இவ்வாண்டில் உலகப் பொருளாதார மன்றத்தின் 2020ஆம் ஆண்டுக் கூட்டத்தில், சீனாவின் கருத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள சீனத் துணை தலைமையமைச்சர் ஹேன் செங் கூறுகையில், பொருளாதாரத்தின் உலகமயமாக்கப் போக்கில் ஏற்படும் இன்னல்களையும் பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டுமானால், இணக்கம் மற்றும் திறந்த உலகப் பொருளாதாரத்தைக் கூட்டாக உருவாக்குவதற்கும், பலதரப்புவாதத்தில் ஊன்றி நிற்பதற்கும் அடிப்படை வழிமுறையாகும் என்று தெரிவித்தார்.

பன்னாடுகள் சமமாகக் கலந்தாய்வு நடத்தி, ஒத்துழைப்பு மேற்கொண்டு, பொருளாதாரத்தின் உலகமயமாக்கம், திறப்பு, இணக்கம், ஒன்றுக்கொன்று வெற்றி பெறுவது என்னும் திசையை நோக்கி வளர்வதை முன்னேற்றி, பொருளாதாரத்தின் உலகமயமாக்கம் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் அதிகரிப்பு சாதனைகளைப் பன்னாட்டு மக்கள் கூட்டாகப் பகிர்ந்து கொள்ளச் செய்ய வேண்டும். இது சீனா உலகிற்கு வழங்கும் முன்மொழிவாகவும், நீண்டகாலமாக சீனா மேற்கொள்ளும் செயல்பாட்டின் கோட்பாடாகவும் உள்ளது.

நடப்பு ஆண்டுக் கூட்டத்தில், வெளிநாடுகளுக்கு உயர் நிலை திறப்புப் பணியை முன்னேற்றும் என்ற முக்கிய அறிவிப்பை சீனா வெளியிட்டுள்ளது. அதோடு, சில நாடுகள் கூறிவரும் பாதுகாப்புவாதம் மற்றும் ஒருதரப்புவாதம் ஆகிய காரணத்தால், வெளிநாட்டுக்குத் திறப்பை முன்னேற்றும் சீனாவின் நடவடிக்கை நின்றுவிடப் போவதில்லை என்று சீனா வாக்குறுதி அளித்துள்ளது. உலகின் தொடரவல்ல வளர்ச்சியில் பங்காற்றுவதில் சீனாவின் நம்பிக்கையை இது வெளிப்படுத்தி, திறந்த உலகப் பொருளாதாரத்துக்கு புதிய இயக்கு ஆற்றலை வழங்கும் என்பது குறிப்பிட்டத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்