புதிய கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் சீனாவின் நம்பிக்கை மற்றும் நடவடிக்கை

2020-02-11 20:52:54
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் 10ஆம் நாள் பெய்ஜிங்கில் புதிய ரக கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணியைக் கள ஆய்வு செய்தார். தற்போது வைரஸ் தடுப்பு நிலைமை இன்னும் கடினமாகவே உள்ளது. பொது மக்களைச் சார்ந்து, வைரஸ் பரவுவதை உறுதியாக தடுத்து, வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்று அவர் திரிவித்தார்.

கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் வைரஸ் தடுப்புப் பணி பற்றி முக்கிய உரை நிகழ்த்துவது, இது மூன்றாவது முறையாகும். அவரது உரை, வைரஸ் தடுப்புப் பணியின் அடுத்த கட்டத்துக்கு வழிவகுத்து, வைரஸ் பாதிப்பைத் தோற்கடிப்பதில் சீன மக்களின் நம்பிக்கையை பெரிதும் உயர்த்தியுள்ளது.

ஷி ச்சின்பிங் கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணி குறித்து 5 கோரிக்கைகளை முன்வைத்தார். நோயாளிகளுக்கு முழுமூச்சுடன் சிகிச்சை அளித்து, சமூக மேலாண்மையை வலுப்படுத்தி, அதிகாரப்பூர்வ தகவல்களை காலதாமதமின்றி வெளியிட்டு, வைரஸ் தடுப்புப் பணிக்கான ஒருங்கிணைந்த வழிகாட்டுதலை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இந்நடவடிகைக்கள், வைரஸ் தடுப்புப் பணிக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.

ஐ.நா தலைமை செயலாளர் குட்ரேஸ் கூறுகையில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சீனா அதிக முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று தெரிவித்தார். தற்போது வைரஸ் தடுப்புப் பணி தீர்க்கமான தருணத்தில் உள்ளது. ஷி ச்சின்பிங் பெய்ஜிங்கில் கரோனா வைரஸ் தடுப்புப் பணிக்கு வழிகாட்டி, முக்கிய ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். சீன மக்கள் மற்றும் உலக மக்களின் உடல் நலத்துக்கும் பாதுகாப்புக்கும் சீனா உத்தரவாதம் செய்வதற்கான புதிய முயற்சி இதுவாகும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்