அமெரிக்க சமூகத்தில் நிலவி வரும் இனவெறிவாதம்

2020-03-15 19:04:48
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

புதிய ரக கரோனா வைரஸ் பரவல், அமெரிக்க சமூகத்தில் சிலர் இனவெறிவாதத்தை நிலைநிறுத்துவதற்கான சாக்குப்போக்காக மாறியுள்ளது. எடுத்துக்காட்டாக, தி வால் ஸ்டீர் நாளேடு அண்மையில் ஒரு விமர்சனக் கட்டுரையை வெளியிட்டது. இனவெறி பாகுப்பாட்டை எழுப்பியுள்ள இக்கட்டுரை, உண்மைக்கும், தொழில் ஒழுக்க நெறிக்கும் புறம்பானது. நோய் பரவல் தடுப்புக்கு தியாகம் செய்யும் சீன மக்களை அவமானப்படுத்திய இக்கட்டுரை சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டைப் பெற்றுள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோனியப் பல்கலைக்கழகத்தின் பெர்கரி கிளை கழகத்தில் இன ஆய்வில் ஈடுபடும் பேராசிரியர் கேசரீன் சோயி பேசுகையில், தி வால் ஸ்டீர் நாளேட்டில் வெளியிட்டப்பட்ட இக்கட்டுரையின் கருத்து தவறானது. பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டினார். முன்னணியில் இருக்கும் செய்தி ஊடகம், இத்தகைய கருத்தை வெளியிட்டது, மேலதிக பயத்தையும், உலகளவில் சீனர்கள் மற்றும் இதர ஆசிய நாட்டவர்களின் கோபத்தையும் எழுப்பும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

சீனாவின் எதிர்ப்பையும், சர்வதேச சமூகத்தின் கண்டனத்தை பொருட்படுத்தாமல், தி வாஸ் ஸ்டீர் நாளேடு தன் தவறைத் திருத்த மறுத்தது.

அமெரிக்கச் சமூகத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் இனவெறிவாதத்தை அமெரிக்க நாட்டவர்கள் சிலர் எதிர்நோக்க விரும்பவில்லை என்பதை அறிகுறிகள் காட்டுகின்றன.

எந்த சமூகத்தைப் பொறுத்த வரை, இனவெறிவாதம் நச்சு மருந்தாகும். எந்த செய்தி ஊடகமும், கூற்று சுதந்திரத்தைப் பயன்படுத்தி, ஒழுக்க நெறியை மறந்து அத்துமீறி செயல்பட்டால், அது தமது வளர்ச்சிப் போக்கினைச் சீர்குலைக்கும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்