அமெரிக்கா மீது ஏன் இத்தனை கண்டனங்கள்?

வான்மதி 2020-03-17 17:07:37
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க பங்குச் சந்தை 16ஆம் நாள் மீண்டும் பெரும் சரிவுடன் முடிவடைந்தது. அன்று மாலை அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய போது, புதிய ரக கரோனா வைரஸ் பரவலின் பாதிப்பை முதன்முறையாக ஏற்றுக் கொண்டார். ஆனால் இந்நோய் பரவலைத் தடுப்பதில் சொந்த செயல்களுக்கு அவர் முழு மதிப்பெண் வழங்கினார்.

ஜனவரி 20 முதல் மார்ச் 13ஆம் நாள் வரை அமெரிக்காவின் முக்கிய ஊடகங்கள் வெளியிட்ட சுமார் 2 லட்சம் செய்திகளை, சீன சர்வதேச வெளியீட்டுக் குழுமத்தைச் சேர்ந்த தற்கால சீன மற்றும் உலக ஆய்வு கழகம் ஆய்வு செய்துள்ளது. ஆய்வு முடிவின்படி, நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் கணக்கீட்டு முறை, பெரிய அளவிலான குடியிருப்பில் பரவல், சீரற்ற நடவடிக்கை காரணமாக தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டில் இன்னல்கள் அதிகம் ஆகியவை அதிகக் கவனத்தை ஈர்த்து, விவாதத்தை உண்டாக்கிய முதல் மூன்று அம்சங்களாகும். மேலும், பொறுப்பற்ற மனநிலை, முடிவெடுத்தல் குறித்த தலைவர்களிடையே இருந்த குழப்பம், தாமதமான வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை கண்டனத்துக்குரிய முக்கிய அம்சங்களாகும்.

இத்தகைய கண்டனங்களை எதிர்கொண்டபோதிலும், தனது தவறுகளைத் திருத்தாத டிரம்ப், சீன வைரஸால் பாதிப்படைந்த தொழில்களுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று சீனாவின் மீது பழிபோட்டுக் கூறியது அதிர்ச்சியூட்டும் விதம் அமைந்தது.

பெருந்தரவு கணக்கீட்டின்படி, அமெரிக்க செய்தி ஊடகங்களிடத்தில் ஐயமும் கவலையும் நிலவுகின்றன. மேலும் அரசு வெளியிட்ட தகவல்கள் குழப்பம் அளிக்கும் விதம் உள்ளன. வாஷிங்டன் போஸ்ட் நாளேட்டில் மார்ச் 7ஆம் நாள் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில், ஒரு மாதத்துக்குள் டிரம்ப் அரசு 14 முறைக்கு மேல் உண்மைக்குப் புறம்பான மற்றும் முரண்பாடான தகவல்களை வெளியிட்டுள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டது.

அமெரிக்கர்களிடத்தில் பிரபலமாக இருக்கும் சுட்டுரையில் வைரஸ் தொடர்பாகப் பதிவேற்றப்பட்ட அம்சங்கள் மக்களின் மன நிறைவின்மையையும் கோபத்தையும் காட்டியுள்ளன.

தாமதமான சோதனை, கூடுவதற்குத் தடை போன்ற நடவடிக்கைகள் தாமாதமாகத் தொடங்கியது ஆகிய காரணங்களால் அமெரிக்காவில் வைரஸ் பரவல் அளவு வெளியிடப்பட்டதை விட மோசமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பொதுச் சுகாதாரப் பாதுகாப்பு, மனிதகுலத்தின் பொது சவாலாகும். முன்கண்டிராத உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும்போது, வெற்றி பெறும் வகையில் பல்வேறு நாடுகள் சர்ச்சைகளை விட்டு விட்டு, நெருங்கிய ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்