சீன ஊடக நிறுவனங்களின் மீது அமெரிக்காவின் கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு சீனா பதிலடி

வான்மதி 2020-03-18 08:48:34
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்காவிலுள்ள சீன ஊடக நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களின் இயல்பான செயல்பாடுகளுக்கு அமெரிக்க அரசு காரணமின்றி தடை விதித்ததோடு, அவர்களின் மீதான பாகுபாடு மற்றும் அரசியல் ரீதியான கட்டுப்பாட்டு நடவடிக்கையைத் தீவிரமாக்கி வருகிறது. குறிப்பாக, 2018ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் சீனாவின் சில நிறுவனங்கள் வெளிநாட்டு முகவராகப் பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுத்ததை அடுத்து, 2020ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 5 நிறுவனங்களை “வெளிநாட்டு தூதுக்குழுவாக” பட்டியலிட்டது.

இந்த 5 செய்தி நிறுவனங்களின் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் சீன ஊடகவியலாளர்களை வெளியேற்றும் அமெரிக்காவின் தவறான இச்செயலுக்கு சீனா எதிர்ப்பு மற்றும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீனா தெரிவித்துள்ளது.

இப்போது, சீனா வெளியிட்ட அறிவிப்பில்,

முதலாவது - அமெரிக்காவின் செயல்களுக்கு எதிராக, அந்நாட்டின் விஓஏ, நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜானல், வாஷிங்டன் போஸ்ட், டைம்ஸ் வார இதழ் ஆகிய 5 ஊடகங்களின் சீனக் கிளைகள் தங்களது பணியாளர்கள், நிதி விவகாரம், அலுவல், நிலையான சொத்துகள் உள்ளிட்ட தகவல்களை சீனாவிடம் தெரிவிக்க வேண்டும். இரண்டாவது - நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜானல், வாஷிங்டன் போஸ்ட் ஆகியவற்றின் செய்தியாளர்கள் தங்களது பத்திரிகை அட்டை(press card) இவ்வாண்டின் இறுதிக்குள் காலாவதியாகப் போகிறது என்றால் 4 நாட்களுக்குள் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திப் பிரிவிடம் பதிவு செய்து, 10 நாட்களுக்கு இந்த அட்டைகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். மேலும், இனிமேல் அவர்கள் சீனாவில் பத்திரிகையாளராகப் பணி புரிய முடியாது.

மூன்றாவது - விசா, நிர்வாக மேற்பார்வை, பேட்டி ஆகிய துறைகளில் சீனப் பத்திரிகையாளர் மீது அமெரிக்கா மேற்கொண்ட தடை நடவடிக்கைக்கு எதிராக சீனா அதேமாதிரியான பதிலடி நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா மேற்கொள்ள வேண்டிய இந்நடவடிக்கைகள் நியாயமான தற்காப்பு நடவடிக்கைகளே. சீன ஊடகங்களின் புகழுக்குத் தீங்கையும் இயல்பான செயல்களுக்கு பாதிப்பையும் ஏற்படுத்திய அமெரிக்கா உடனடியாகத் தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டில் சீனா தொடர்ந்து பதிலடி நடவடிக்கையை மேற்கொள்ளும்.

இருப்பினும், சீனா பின்பற்றி வரும் வெளிநாட்டுத் திறப்பு கொள்கை மாறவில்லை. இந்த அடிப்படைக் கொள்கை மாறாது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்