செய்தி ஊடக விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சீனாவின் பதில் நியாயமானது

மதியழகன் 2020-03-19 10:25:21
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன ஊடக நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைக்கு பதிலடியாக, சீனா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, சீன ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்திலுள்ள வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள விமர்சனக் கருத்துக்களை உறுதியாக எதிர்க்கிறோம் என்று ஹாங்காங்கிலுள்ள சீன வெளியுறவு அமைச்சகத்தின் ஆணையர் அலுவலகம் மார்ச் 18ஆம் நாள் தெரிவித்துள்ளது.

இந்த ஆணையர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில்,

அமெரிக்கப் பத்திரிகையாளர்கள், ஹாங்காங், மக்கௌ உள்ளிட்ட சீன மக்கள் குடியரசின் பகுதிகளில் தொடர்ந்து செய்தியாளராகப் பணிபுரிய அனுமதிக்காது. இது, அமெரிக்கா சீன ஊடக நிறுவனங்கள் மீது கட்டுப்பாடு விதித்ததால் ஏற்பட்ட பின்விளைவு ஆகும். அதற்கு, சீனா சரியான பதிலடி கொடுத்திருப்பது நியாயமானது. இதற்கு அமெரிக்கா பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஹாங்காங்கிலுள்ள வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம், அமெரிக்க அரசுக்கு மனநிறைவின்மை தெரிவித்து, அமெரிக்கா தனது தவறான முடிவை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாக அந்த செய்தியாளர் தொடர்பாளர் கூறினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்