நோய் பரவல் தடுப்பில் சீனாவின் முயற்சிகளை உண்மைகள் காட்டுகின்றன

2020-03-19 19:40:34
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கொவைட் 19 நோய் பரவிய பிறகு, நோய் பரவல் பற்றிய தகவல்களை சீனா வேண்டுமென்றே மறைந்து, பிற நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று அமெரிக்காவின் சில அரசியலாளர்களும், செய்தி ஊடகங்களும் ஆதாரமின்றி குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சீனாவில் நோய் பரவல் தடுப்புப் பணிகளை உண்மைகள் வெளிப்படுத்துகின்றன. நோய் நிகழ்ந்த பிறகு, பொது மக்களின் உயிர் மற்றும் சுகாதாரத்தையும், உலகப் பொது சுகாதாரப் பாதுகாப்பையும் பேணிகாப்பதிலிருந்து, நோய் பரவல் தொடர்பான தகவல்களை சீனா உடனடியாகவும் வெளிப்படையாகவும் வெளியிட்டு, நோய் தடுப்புக்கான சர்வதேச ஒத்துழைப்பை ஆக்கப்பூர்வமாக மேற்கொண்டுள்ளது. சீன மக்களின் சளையாத முயற்சிகளுடன், இரு திங்களுக்கு உள்ளான காலத்தில் நோய் பரவி வரும் போக்கினை சீனா விரைவாக தடுத்துள்ளது. மார்ச் 18ஆம் நாள், நோய் அதிகமாக பாதித்த ஹூபெய் மாநிலத்தில் புதிதாக யாருக்கும் நோய் தொற்று ஏற்படவில்லை. சீனாவின் நோய் தடுப்பு நிலைமை சீராகி வருவதற்கான அறிகுறி இதுவாகும்.

அமெரிக்காவின் சில அரசியலாளர்கள், சீனாவை அவமானப்படுத்திய போது, அமெரிக்காவில் நோய் நிலைமை தீவிரமாகி வருகின்றது. நோய் பரவி வரும் துவக்கத்தில், அமெரிக்க அரசு பொறுப்புணர்வுடன் இதை ஆக்கப்பூர்வமாக சமாளிக்கவில்லை. நோயாளி கண்காணிப்பு, தகவல் வெளியீடு முதலியவற்றில் மெதுவாக நடவடிக்கை மேற்கொண்டதால், அமெரிக்க மக்கள் இந்நோய் பற்றி பெரும் விழிப்புடன் இருக்கவில்லை.

அமெரிக்காவின் அரசியல்வாதிகள், தமது நாட்டின் நோய் பரவல் தொடர்பான தகவல்களை வெளிப்படையாக வெளியிடவில்லை, பிற நாடுகள் மீது தடை நடவடிக்கை மேற்கொண்டனர். புதிய ரக கரோனா வைரஸை, சீன வைரஸ் என பெயரிட்டனர். நோய் தடுப்புக்கான பன்னாட்டு முயற்சியை அவர்கள் சீர்குலைத்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் அவசர திட்டப்பணிப் பொறுப்பாளர் மெகில் ரியன் 18ஆம் நாள் பேசுகையில், வைரஸுக்கு எல்லை இல்லை. இந்த நேரத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு, வைரஸைக் கூட்டாக தடுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

தற்போது உலகில் நோய் தடுப்பு நிலைமை சிக்கலானது. ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு, நோயை வெல்லும் சக்தி மிக்க ஆயுதமாகும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்