மே 4 இயக்கத்தின் எழுச்சியை அவதூறு கூற கூடாது

2020-05-10 19:07:24
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க அரசுத் தலைவரின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் போதிங்கேர் அண்மையில் வெர்ஜினிய பல்கலைக்கழகத்தின் மிலே மையத்தில் சீன மொழியில் உரை நிகழ்த்திய போது, சீனாவின் மே 4 இயக்கத்தின் எழுச்சியை பொது அதிகாரத்தை எதிர்க்கும் குடிமக்கள்வாதம் என அவதூறு கூறி, சீனாவின் வளர்ச்சி பாதையைக் குற்றஞ்சாட்டினார். சீனாவின் வரலாறு, சீன நாட்டின் நிலைமை மற்றும் சீன மக்கள் பற்றிய புரிந்துணர்வின்மையை அவரது உரை வெளிப்படுத்தியுள்ளது.

சீனாவின் உச்ச தலைவர் கூறியதை போல, மே 4 இயக்கம் ஏகாதிபத்தியம் மற்றும் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான மாபெரும் நாட்டுப்பற்று புரட்சி இயக்கமாகும். புதிய சிந்தனை, புதிய பண்பாடு மற்றும் புதிய அறிவுகளைப் பரப்பிய மாபெரும் இயக்கமாகும். சீனாவின் வரலாற்றுப் போக்கில், நாட்டுப்பற்று, முன்னேற்றம், ஜனநாயகம் மற்றும் அறிவியல் ஆகியவற்றை அம்சமாக கொண்ட மே 4 இயக்கத்தின் எழுச்சி, சீனாவின் தலைமுறை தலைமுறையான இளைஞர்கள், நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுவதற்கு ஊக்கம் அளித்துள்ளது.

புதிய ரக கரோனா வைரஸ் பரவலை எதிர்நோக்கி, சீன மக்கள் ஒன்றுபட்டு அதிக இன்னல்களை சமாளித்து, நோய் தடுப்புப் பணியில் முக்கிய சாதனையைப் படைத்துள்ளனர். ஆபத்தான நேரத்தில் சீன மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொறுப்பேற்பது, மே 4 இயக்கத்தின் எழுச்சியை வெளிப்படுத்துவது ஆகும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்