தொற்றுநோய் உலகளவில் பரவிய நிலையில், அமெரிக்காவின் சில அரசியல்வாதிகள் தங்களது தவறுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும்

ஜெயா 2020-05-13 19:04:16
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்காவின் தலைவர்கள் சொந்த நாட்டு மக்களின் உயிரிழப்புக்கும், உலகில் பிற நாட்டு மக்களின் உயிரிழப்புக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்று அந்நாட்டு புகழ்பெற்ற அறிஞர் நோம் சாம்ஸ்கி அண்மையில் செய்தி ஊடகத்துக்குப் பேட்டியளித்த போது கூறினார். அவர் மேலும் கூறுகையில், அமெரிக்க மக்களுக்கு எதிராக செய்த குற்றத்தை மூடிமறைப்பதற்காக, அமெரிக்க தலைவர்கள் பிற நாடுகள் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

வைரஸ் பரவலுக்கு எல்லை இல்லை. எந்த ஒரு தனி நாட்டின் அலட்சியமும், வலிமையற்ற சமாளிப்பும், நோய் தடுப்பில் முழு உலகின் முன்னேற்றத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், அமெரிக்காவின் இந்த அரசியல்வாதிகளின் பார்வையில், மக்கள் உயிரைக் காப்பாற்றுவதை விட அரசியல் நலனைப் பெறுவது முக்கியம் என கருதுகின்றனர்.

கனடாவில் பரவியுள்ள வைரஸ் அமெரிக்க பயணிகளிடமிருந்து வருகிறது என்று கனெடியன் நேஷனல் போஸ்ட் என்ற செய்தித்தாளில் அமெரிக்காவின் பல மாநிலங்களின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் செய்தி வெளியிடப்பட்டது. ஜப்பானின் தேசிய தொற்றுநோய் ஆய்வகத்தின் புலனாய்வின்படி, ஜப்பானில் பரவியுள்ள கரோனா வைரஸ் ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் வாய்ப்பு அதிகம். ஆஸ்திரேலிய தலைமையமைச்சர் மோரிசன் மார்ச் திங்களில் பேட்டியளித்த போது, அந்நாட்டில் கண்டறியப்பட்ட நோயாளிகளில் பெரும்பாலானோர் அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ளனர் அல்லது தொடர்பு கொண்டிருந்தனர் என்று கூறினார்.

உண்மையை வளைந்த இந்த அமெரிக்க அரசியல்வாதிகள், நோய் தடுப்பு பணியில் உலக ஒத்துழைப்பிற்கு தடையாக இருந்து, உலகப் பொது சுகாதாரப் பாதுகாப்புக்கு தீங்கு விளைவித்துள்ளனர் என்பதை பல்வேறு உண்மைகள் எடுத்துக்காட்டுகின்றன.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்