அமெரிக்காவின் உயிரின ஆராய்ச்சிக் கூடத்தின் உண்மை நிலை என்ன?: ரஷியா கேள்வி!

2020-05-15 19:57:13
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் கூறுகையில், சீனா மற்றும் ரஷியாவின் அண்டை நாடுகளில் அமெரிக்கா பல உயிரின ஆராய்ச்சிக் கூடங்களைப் பரவல் செய்துள்ளது. அதோடு, இந்த உயிரின ஆராய்ச்சிக் கூடங்களின் ஆய்வு உள்ளடக்கங்கள் பற்றி அது வெளிப்படையாகக் கூற விரும்பவில்லை. அதற்கான காரணம் சந்தேகிக்கப்படத்தக்கது என்று கூறினார்.

மேலும், கடந்த ஆண்டு அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த ஃபோர்ட் டெட்ரிக் எனும் ஆராய்ச்சிக் கூடம் மூடப்பட்ட உண்மையான காரணங்களை அமெரிக்க அரசு வெளியிட வேண்டும். இந்த ஆராய்ச்சிக் கூடம் கரோனா வைரஸை ஆராய்ந்ததா இல்லையா என்பது பற்றியும், வைரஸ் ரகசியமாக வெளியேறியுள்ளதா இல்லையா என்பது பற்றியும் பதில் அளிக்க வேண்டும் என்று இவ்வாண்டின் மார்ச் திங்கள், அமெரிக்காவின் இணைய பயன்பாட்டாளர்கள் பலர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதுவரை, அமெரிக்க அரசியல்வாதிகள் இது பற்றி ஏதும் விளக்கிக் கூறவில்லை.

சந்தேகிக்கப்பட்டத்தக்க இந்த ஆராய்ச்சிக் கூடம் மனிதகுலத்தின் பொது அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அமெரிக்க அரசியல்வாதிகள் உண்மையை விளக்கி கூற வேண்டும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்