பொருளாதார மீட்சிக்கான முக்கிய இயக்கு ஆற்றல் நுகர்வு

தேன்மொழி 2020-06-02 15:49:25
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனா நுகர்வை விரிவாக்குவது, தொற்று நோய்க்கு பிறகு சீனப் பொருளாதாரத்தை மீட்கும் முக்கிய இயக்கு ஆற்றலாக மாறும். இது, உலகப் பொருளாதார மீட்சிக்கும் முக்கிய பங்காற்றும் என்று பிரிட்டன் ரோயல் சர்வதேச விவகார ஆய்வு நிறுவனத்தின் தலைவர் கிம் ஓனில் அண்மையில் சின்ஹுவா செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்தபோது தெரிவித்தார்.

இவ்வாண்டு புதிய ரக கரோனா வைரஸ் பரவலினால், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் குறிப்பிட்ட வசதியான சமூகத்தை உருவாக்குவதற்காகவும், வறுமை ஒழிப்புப் பணிக்கான முக்கிய ஆண்டாதவும், 2020ஆம் ஆண்டு திகழ்கிறது. இந்நிலைமையில், தொற்று நோயால் சீனாவுக்கு ஏற்பட்ட நிர்பந்தத்தையும் அறைகூவலையும் அலட்சியம் செய்யக்கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.

முன்பு சின்ஹுவா செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்திருந்த அவர் கூறுகையில், உலகமயமாகத்தின் இயக்க ஆற்றல், நுகர்வோர்களிடமிருந்து பெறப்படுகிறது. எதிர்வரும் 5 ஆண்டுகளில், சீன நுகர்வோர்கள் உலகமயமாக்கத்தின் முக்கிய இயக்கு ஆற்றலாகத் விளங்குவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

சீனாவின் வறுமை ஒழிப்பு தொடர்பாக அவர் கூறுகையில், இத்துறையில் சீனா பெற்றுள்ள சாதனைகள் என் மனதில் ஆழப்பதிந்துள்ளது. இதில், புதிய ரக நகரமயமாக்க வளர்ச்சி, நடுத்தர வருமானம் பெறுவோர்கள் எண்ணிக்கை விரைவான அதிகரிப்பு ஆகியவை தெளிவாக காணப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். பன்முகங்களிலும் வறுமை ஒழிப்பை நனவாக்குவது, கொள்கை மூலம் சீனா பெற்றுள்ள மிகப் பெரிய சாதனையாகும். உலகில், மிக முக்கிய பொருளாதார சாதனையாகவும் இது திகழ்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்