மேலை நாடுகளில் மோசமாகி வரும் இனப் பாகுபாட்டு பிரச்சினை

2020-06-06 19:20:17
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அண்மையில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அமெரிக்கர் ஃபுரோயிட் கொல்லப்பட்டதால் அமெரிக்கா முழுவதிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அமரிக்காவின் இனப் பாகுபாட்டை சர்வதேச சமூகம் கண்டித்ததோடு, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா முதலிய மேலை நாடுகளின் தலைவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.

சில மேலை நாடுகளில், கடுமையான இனப் பாகுபாட்டு பிரச்சினை நிலவுகிறது.

வரலாற்றுப் போக்கில், முக்கிய மேலை நாடுகள் முதலாளித்துவ வளர்ச்சியின் துவக்க கட்டத்தில், காலனித்துவத்தை நடைமுறைப்படுத்தி வந்தது. உலகம் முழுவதிலும் இனப் பாகுபாட்டுப் பிரச்சினை ஏற்பட்டதற்கு இது முக்கிய மூல காரணமாகும். தற்போது பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட மேலை நாடுகளில், சமூக அமைப்பு முறை, ஏழை பணக்கார இடைவெளி உள்ளிட்ட சிக்கலான காரணிகளால், வெள்ளையர் தவிர்ந்த கருப்பு இன மக்களும், சிறுபான்மை தேசிய இனத்தவர்களும் சந்திக்கும் நியாயமற்ற அனுகு முறை பற்றி அந்நாடுகளின் செய்தி ஊடகங்கள் அடிக்கடி செய்தி வெளியிட்டுள்ளன. எடுத்துக்காட்டாக 2011ஆம் ஆண்டு லண்டனில் ஏற்பட்ட கலவரம், 2013ஆம் ஆண்டு ஸ்டோக்ஹோம் நகரில் ஏற்பட்ட கலவரம் ஆகியவை, இனப் பாகுபாட்டால் உருவானவையாகும். இந்த கோணத்திலிருந்து பார்த்தால், அமெரிக்கர் ஃபிரோயிட் கொல்லப்பட்டதை எதிர்த்து மேலை நாடுகளின் பொது மக்கள் பலர், பெருமளவு ஆர்பாட்டம் நடத்தி வருவது, தனது நாட்டில் இனப் பாகுபாடு நாளுக்கு நாள் மோசமாகி வருவது பற்றிய மனநிறைவின்மை காட்டும் நோக்கத்திலும், மனித நேய வெளிப்பாடாகவும் அமைந்துள்ளது


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்