கொவைட் 19 நோய்க்கு எதிரான போராட்டத்தில் மக்களின் பாதுகாப்புக்கு முதலிடம் கொடுக்கும் சீனா

2020-06-07 18:49:23
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கொவைட் 19 நோயை ஒழிக்க சீனா எடுத்த நடவடிக்கைகள் பற்றிய வெள்ளையறிக்கையை சீன அரசவையின் தகவல் தொடர்பு அலுவலகம் 7ஆம் நாள் வெளியிட்டது. இந்நோய் பரவலைத் தடுப்பதில் கடைப்பிடிக்கப்பட்ட கடினமான போக்கை இவ்வறிக்கை பதிவு செய்து, சீனாவில் நோய் தடுப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான பயன்மிக்க செயல்களைப் பன்னாடுகளுடன் பகிர்ந்து கொண்டு, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு மூலம், நோயை வென்றெடுக்கும் நம்பிக்கை மற்றும் ஆற்றலைப் பரவல் செய்துள்ளதை எடுத்துக்காட்டியுள்ளது.

இவ்வறிக்கையின்படி, பொது மக்களுக்கான பாதுகாப்பை முதன்மை இடத்தில் சீனா வைத்துள்ளது. மூன்று மாதங்களில் கொவைட் 19 நோயை எதிர்க்கும் போராட்டத்தில் சீனா வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய அனுபவம் இதுவாகும்.

கொவைட் 19 நோய், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின் மிக வேகமாக பரவிய, மிக அளவிலான, மிக கடுமையான பொது சுகாதார பேரிடராகும்.

140 கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ள சீனா குறுகிய நேரத்துக்குள் இந்நோய் பரவலைத் தடுப்பதற்கு காரணம் என்ன? சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வலிமைமிக்க தலைமை இதுவாகும் என்று இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நோய் ஏற்பட்ட பிறகு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், மக்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் உடல் நலனை முதலிடத்தில் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்நோயினால் ஏற்பட்டும் நெருக்கடியின் சோதனையை அனுபவித்த பிறகு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மீது சீன மக்களின் ஆதரவு மற்றும் நம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்நெருக்கடியை வாய்ப்பாக கொண்டு, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு மூலம் பல்வகை வளர்ச்சி இலக்குகளை நனவாக்கி, உலக வளர்ச்சிக்கு புதிய பங்காற்ற முடியும் என்று சீன மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்