இந்தியா யானையும் சீனா டிராகனும் இணைந்து நடனமாட வேண்டும் என்பதே விருப்பம்

2020-06-24 21:25:02
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவின் இளம் தலைவர்களின் கூட்டமைப்புத் தலைவர்  ஹிமட்ரிஷ் சுவான் ஜுன் 23ஆம் தேதி,  டைம்ஸ் ஆப் இந்தியா எனும் ஆங்கில செய்தித்தாளில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார்.

சீன-இந்திய உறவு உலக முக்கியத்துவம் வாய்ந்தது. எல்லைப் பிரச்சினையை அமைதியான முறையில் கையாள வேண்டும் என்று அவர் தனது கட்டுரையில் சுட்டிக்காட்டினார்.

இவ்வாண்டு, சீன-இந்திய தூதரக உறவு நிறுவப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவாகும். கடந்த பல ஆண்டுகளில்,  இரு நாட்டுத் தலைவர்களின் பொது கருத்துக்களின்  வழிகாட்டலில், சீன-இந்திய உறவு சீராகவும் நிலையாகவும் வளர்ந்து வருகிறது. இரு தரப்பு ஒத்துழைப்பு வாய்ப்புக்கள் இடைவிடாமல் தோன்றியுள்ளன. இந்நிலையில், தற்போது இரு நாட்டு எல்லையில் மோதல் சம்பவம், உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலை நாடுகளைச் சேர்ந்த பலர், சீனாவுக்கு எதிராக இந்தியா நிற்க வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால், இந்திய-சீன உறவு, சிலரின் கற்பனையை விட மேலும் வலுவாக இருக்கிறது. இந்தியாவும் சீனாவும் ஞானத்துடன் செயல்பட்டு,  அமைதியான முறையில் சர்ச்சையைத் தீர்க்க முடியும் என்று சுவான் தெரிவித்தார்.

சுவானின் கட்டுரையில் பல கருத்துக்களைப் போல, நெடுங்காலத் திட்டம், அமைதி மற்றும் ஒத்துழைப்பு ஆகிய ஒட்டுமொத்த நிலையைப் பார்த்து, இரு நாடுகள் கவனமாக தற்போதைய பிரச்சினையைக் கையாள வேண்டும். உலகளவில், 100 கோடிக்கும் மேலான மக்கள் தொகையை கொண்டிருக்கும் நாடுகளே, சீனா மற்றும் இந்தியா மட்டுமே.  இரு நாடுகளுக்கிடையே பல ஒற்றுமைகளே,  இரு நாட்டு ஒத்துழைப்புக்கு நன்மை பயக்கும். 21ஆம் நூற்றாண்டை ஆசியா நூற்றாண்டாக மாற்றும் விதம்,  இரு நாடுகள் கூட்டாக முயற்சி எடுக்க வேண்டும்.

சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில், சுவான் போன்ற மேலதிக பிரமுகர்கள், சீன-இந்திய நட்புறவை வளர்க்க முயற்சி மேற்கொண்டு வருவதை எதிர்பார்க்கின்றோம். அவர்கள் போன்ற நண்பர்களே மேலதிகமாக இருந்தால், இரு நாட்டு மக்களுக்கும் இரு நாட்டுறவுக்கும் அருமையான எதிர்காலம் இருக்கும். அதனால், இந்தியா யானையும் சீனா டிராகனும் இணைந்து நடனமாட முடியும் என்று நம்புகின்றோம்.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்