இணையத்தில் குவாங்சொ பொருட்காட்சி கொண்டு வரும் ஆக்கப்பூர்வமான சமிக்கை

சரஸ்வதி 2020-06-25 18:23:16
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

குவாங்சொ பொருட்காட்சி என்று அழைகப்படும் சீனாவின் 127ஆவது இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்காட்சி, 24ஆம் நாள் வெற்றிகரமாக நிறைவடைந்தது. 10 நாட்கள் இணையதளம் வழியாக நடைபெற்ற இப்பொருட்காட்சியில், 26 ஆயிரம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்டன. 217 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் வெளிநாட்டுக் கொள்வனவு வணிக நிறுவனங்கள் இதில் பதிவு செய்து, வணிகப் பேச்சுவார்த்தை நடத்தின. கடந்த 60 ஆண்டுகளாக, ஆண்டுக்கு இரு முறை நடத்தப்பட்டு வரும் இப்பொருட்காட்சி இவ்வாண்டு கரோனா காரணமாக முதன்முறையாக இணையத்தில் நடத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டுத் திறப்பு அளவை சீனா உறுதியாக விரிவாக்கும் ஆக்கப்பூர்வமான சமிக்கை இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உலகத் தொழில் துறைக்கான வினியோகத் தொடர்களின் பாதுகாப்பை முயற்சியுடன் பேணிக்காக்கும் பொறுப்பை சீனா ஏற்றுள்ளதை இது காட்டியுள்ளது. உலகச் சந்தையின் நம்பிக்கையும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

திட்டப்படியே, 128ஆவது குவாங்சொ பொருட்காட்சி இவ்வாண்டின் அக்டோபர் திங்களில் நடைபெறும். பொருட்காட்சி அரங்குகளுக்கான விண்ணப்பம் ஜூன் திங்கள் 29ஆம் நாள் தொடங்கப்படும். அதே வேளையில், 3ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி இவ்வாண்டின் நவம்பர் திங்களில் ஷாங்காய் மாநகரில் நடைபெறும். நெருக்கடியான இந்நிலையில், புதிய வாய்ப்புகளைத் தேடி, நிலையற்ற சூழலில், புதிய முன்னேற்றப் போக்கை வளர்ப்பது என்பது, சீனப் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை வழிகாட்டியாகும். உலகப் பொருளாதார வளரச்சிக்கு வாய்ப்புகளையும் சீனா கொண்டு வரும். கூட்டு வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளை உலகத்துடன் பகிர்ந்துகொள்ளும் சீனா, உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு மேலதிகமான இயக்க ஆற்றலைக் கொண்டு வரும் என்பது திண்ணம்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்