தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் அமெரிக்கா இரட்டை நிலைப்பாடு!

மதியழகன் 2020-06-25 20:10:22
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஹாங்காங் வெகுவிரைவில் அமைதிச் சூழலுக்கு திருப்பி, நகரவாசிகள் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து, வேலை செய்ய வேண்டும் என்பது பொது எதிர்பார்ப்பு ஆகும்.  செழுமை மற்றும் நிலைப்புத்தன்மையான ஹாங்காங் உருவாக வேண்டும் என்பது  பொது விருப்பமாகும்.  இந்த எதிர்பார்ப்பையும விருப்பத்தையும் நனவாக்குவதற்கு சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்துக்கான தேசிய பாதுகாப்புச் சட்டம், துணைபுரியும்.

இந்த சட்டத்திற்கு ஹாங்காங் நகரவாசிகள் அதிக ஆதரவு மற்றும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

ஆனால், இச்சட்டம் குறித்து, மேலை நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சிலர்  ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வைப்பதோடு, அவதூறு பரப்பி வருகின்றர். இதற்கு காரணம் என்ன? இது பற்றஇ, அமெரிக்காவில் புகழ்பெற்ற மனித உரிமை அமைப்பான மக்கள் எதிர்ப்பு இயக்கத்தின் நிறுவனர், கேவின் ஜிஸ் பேசுகையில்,

இச்சட்டம் குறித்து அவதூறு பரப்பும் அமெரிக்கா, தேசிய பாதுகாப்பு விவாகரத்தில் தனது இரட்டை நிலைப்பாடுகளை எடுத்துக்காட்டுகிறது.  அமெரிக்காவுக்கு சொந்தமான தேசிய  பாதுகாப்புச் சட்டம் உண்டு. குறிப்பாக “செப்டம்பர் 11ஆம் நாள்” பயங்கரவாத தாக்குதல் நடந்த பிறகு,  சட்டம் தீவிரமாக்கப்பட்டது. தற்போது சீனாவின் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விமர்சிக்கும் அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு தெள்ளத் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. மேலும், ஹாங்காங்கில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்,  முன்னேற்றத்தை இலக்காக கொண்ட ஆர்ப்பாட்டம் அல்ல. ஹாங்காங் விவகாரத்தில் தலையிட அமெரிக்கா முயல்வதை போதுமான ஆதாரங்கள் காட்டுகின்றன.

ஹாங்காங்கின் தேசிய பாதுகாப்புச் சட்டத்தால் சர்வதேச அரங்கில் எழுந்த சில குரல் பற்றி சிங்கப்பூர் வழக்கறிஞர்  சியாவ் சின்யாவ்,பேசுகையில்,

ஹாங்காங் விவகாரத்தைப் பற்றி அடிக்கடி பேசிய வரும் வெளிநாட்டு அரசியல்வாதிகள்,  அரசியல் உள்நோக்கங்களைக் கொண்டுள்ளனர்.

இது, அந்த அரசியல்வாதிகளின் அரசியல் விளையாட்டு தான். அவர்கள் இத்தகைய வழிமுறையின் மூலம் சீனாவுக்கு கட்டுப்பாடு விதிக்க முயல்கின்றனர் என்று தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்