பொறுப்பைத் தட்டி கழிக்கும் அமெரிக்க அரசியல்வாதிகள்

2020-06-26 19:12:51
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க அரசியல்வாதிகள் பொறுப்பைத் தட்டி கழிக்கும் செயல்களை பன்னாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால், அமெரிக்க அரசியல்வாதிகள் இன்னும் செயல்பட்டு வருகின்றனர்.

அமெரிக்க அரசு புதிய உயர் நிலையில் தமது பொறுப்பைத் தட்டி கழிப்பதாக வாஷிங்டன் போஸ்ட் எனும் செய்தித்தாள் கடந்த சில நாட்களில் பல முறை வெளியிட்ட கட்டுரைகளில் குற்றஞ்சாட்டியது. ஆதரவு விகிதம் சரிவை எதிர்நோக்கி, வெள்ளை மாளிகையில் தொடர்ந்து அதிகாரம் செலுத்த முயலும் அமெரிக்க அரசியல்வாதிகள், அதற்கு எந்த வழிமுறையும் இல்லை என்பதால் கவலைப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் தங்கள் பொறுப்பைத் தட்டி கழிக்கின்றனர்.

எடுத்துக்காட்டாக, அண்மையில் ஒக்லஹோமா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொள்வோர் பொறுப்பு விலக்கு அறிக்கையில் கையொப்பமிட வேண்டும். இவ்வறிக்கையின்படி, கூட்டத்தில் கலந்து கொள்வதனால் புதிய ரக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால், தேர்தல் குழு அல்லது இக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யும் தரப்புக்கு மேல்முறையீடு செய்ய கூடாது என அவர்களிடம் எழுதி வாங்கப்பட்டது. தேர்தல் பரப்புரை கூட்டம் பெருமளவில் வைரஸ் பரவுவதற்கு காரணமாக மாறக்கூடும் என்று அமெரிக்காவின் புரான் பல்கலைக்கழகத்தின் மருத்துவயியல் நிபுணர் மேகன் ரேன்னி எச்சரிக்கை விடுத்தார். அமெரிக்க அரசியல்வாதிகள் நோய் தடுப்பில் ஈடுபடாமல் அரசியல் நோக்குடன் செயல்படுவதால், மேலதிக அமெரிக்க மக்கள் தங்கள் உயிரை விலையாக கொடுக்க வேண்டியதானது. அமெரிக்க அரசு நோய் தடுப்புக்காக ஆக்கப்பூர்வ நடவடிக்கையைத் தொடர்ந்து கைவிட்டால், கற்பனை செய்ய முடியாத துன்பத்தை அமெரிக்கா எதிர்கொள்ளும் என்று தி அட்லாண்டிக் எனும் மாத இதழில் அண்மையில் வெளியான கட்டுரையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்