சீன உற்பத்திப் பொருட்கள் தடுப்பு யாருக்கு பாதிப்பு?

வான்மதி 2020-06-27 17:15:34
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கடந்த ஒரு வாரத்தில் சீனாவிலிருந்து வந்த சரக்குகளின் சுங்க நடைமுறைத் தீர்வு, இந்தியாவின் சென்னை, மும்பை, தில்லி, பெங்களூரு உள்ளிட்ட துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் தடுக்கப்பட்டுள்ளது என அந்நாட்டுச் செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. ஆனால் இந்திய அதிகார வட்டாரம் இதற்கு இதுவரை தெளிவான விளக்கம் அளிக்கவில்லை.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, சில அமெரிக்கத் தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆப்பிள், சிஸ்கொ, டெல், ஃபோர்ட் உள்ளிட்டவற்றின் உற்பத்திப் பொருட்களும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் மின்கருவி பாகங்களும் சென்னை துறைமுகத்தில் சோதனையின் காரணமாக சுங்க நடைமுறை தீர்வு உரிய நேரத்துக்குள் நிறைவேற்றப்பட முடியவில்லை.

தற்போது மின்னணு, இயந்திரம், வாகனம், மருந்து தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியா அதிக அளவுக்கு சீனாவைச் சார்ந்திருக்கிறது. ஆனால் அண்மையில் சீன வணிகப் பொருட்களைத் தடுக்க வேண்டும் என்ற முழக்கங்கள் இந்தியாவில் அடிக்கடி எழுந்தன. இது பகுத்தறிவு மற்றும் பக்குவம் இல்லாத கருத்து. புள்ளிவிவரங்களின்படி தற்போது இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா மாறியுள்ளது. 2019ஆம் ஆண்டில் சீனாவிலிருந்து இந்தியா செய்த இறக்குமதியின் மொத்த மதிப்பு 7000 கோடி அமெரிக்க டாலராகும். நோய்த் தொற்றால் மேற்கொண்ட முடக்க நடவடிக்கை நீக்கப்பட்ட இத்தருணத்தில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதைத் திடீரென நிறுத்தினால், இந்தியா உள்நாடு அல்லது வெளிநாடுகளிலிருந்து மாற்று வழியைத் தேட வேண்டும். அதோடு, இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தித் தொழிலின் வினியோகச் சங்கிலியும் குழப்பமான நிலையில் சிக்கிக் கொள்ளும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்