டிராகனும் யானையும் இணைந்து நடனமாடுவதற்கு வலிமையான தளம் அமைய வேண்டும் என்பதே இரு நாட்டு மக்கின் விருப்பம்

மதியழகன் 2020-07-19 20:52:26
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவும் இந்தியாவும், பொருளாதார வளர்ச்சியை முதன்மையாகக் கொண்டு, அதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றன. இந்த செயல்பாடு, சீன-இந்திய இரு தரப்புறவின் வெற்றிக்கான எல்லையாகும். இதற்கிடையில், இரு நாட்டு எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள மோதல் சம்பவத்தால், பொருளாதார வர்த்தக துறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாட்டு உறவை வளர்க்கும் போது, பொருளாதார வர்த்தக உறவில் மட்டும் கவனம் செலுத்தினால், அந்த உறவு பலவீனமாக தான் இருக்கும்.

இரு நாடுகளுக்கிடையிலான பரிமாற்றத்தில் மக்கள் தொடர்பு முக்கியமானது. மக்களிடையேயான பரிமாற்றத்திற்கு மனம் சார்ந்த தொடர்பு முக்கியமானது. குறிப்பாக, சீன-இந்திய உறவை வளர்ப்பதற்கு இரு நாட்டு மக்களின் நல்ல எண்ணம் ஆதாரமாக இருப்பதோடு, இரு நாடுகளின் பொது நலன்களுக்கு அது நன்மையளிப்பதாகவும் இருக்கும். எனவே, பண்பாடு மற்றும் நாகரிகங்களின் வழிகாட்டலுடன், சீன-இந்திய உறவு பன்முக பரிமாற்றத்தை நோக்கி மேம்படுத்தப்பட வேண்டும். மக்கள் தொடர்பு மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றம் ஆகியவற்றின் மூலம், மேலும் பரஸ்பர நம்பிக்கை நிறைந்த நாட்டுறவு உருவாக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

சீன-இந்திய நாடுகளின் 270கோடி மக்களிடையே பெரும் பரிமாற்றமும் பெரிய ஒத்துழைப்பும், டிராகனும் யானையும் இணைந்து நடனமாடுவதற்கு வலுவான அடிப்படையிட்டு, பொது கருத்துக்கான நல்ல சூழலை உருவாக்கும் விதமாக அமைய வேண்டும். அது மட்டுமல்லாமல், இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கு அது உந்து சக்தியையும் ஊட்டும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்