பகுத்தறிவு மனப்பான்மை மற்றும் நெகிழ்வுடன் பிரிட்டன் சீனாவுடனான உறவை அணுக வேண்டும்

2020-07-24 11:39:54
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ அண்மையில் பிரிட்டனில் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டின் தலைமையமைச்சர் போரிஸ் ஜோன்சனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையில் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக அவர்கள் விவாதித்துள்ளனர்.

அதனையடுத்து, 2027 ஆம் ஆண்டு இறுதிக்குள், பிரிட்டனின் 5 ஜி வலைப்பின்னலிலிருந்து சீனாவின் ஹுவா வெய் கூட்டு நிறுவனத்தின் அனைத்து சாதனங்களும் அகற்றப்பட வேண்டும் என்று ஜுலை 14ஆம் நாள் பிரிட்டன் தலைமையமைச்சர் போரிஸ் ஜோன்சன் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, ஹாங்காங் விவகாரத்தில் பிரிட்டனின் கடவு சீட்டைக் கொண்டுள்ள சுமார் 30 லட்சம் ஹாங்காங் குடிமக்களுக்கு பிரிட்டனில் குடியேறுவதற்குரிய வாய்ப்பை வழங்கவுள்ளதாக பிரிட்டன் அறிவித்திருந்தது.

சீனாவுக்கு எதிரான பிரிட்டன் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மைக் போம்பியோ வெகுவாக பாராட்டியுள்ளார். ஆனால், பிரிட்டனின் நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளைச் சீனா மேற்கொள்ளும் என்பதை அந்நாடு எதிர்பார்க்கக் கூடும்.

உண்மையில், அமெரிக்காவிடமிருந்து நலன்களைப் பெற முயல்வதன் காரணமாகவே, பிரிட்டன் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்குச் சான்றாக, போம்பியோவின் பிரிட்டன் பயணத்தில், அமெரிக்க-பிரிட்டன் தாராள வர்த்தக உடன்படிக்கை பற்றி விவாதிக்கப்பட்டதைக் குறிப்பிடலாம்.

இந்த உடன்படிக்கை பிரிட்டனைப் பொறுத்த வரை, பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வுடன்படிக்கையில் கையொப்பமிட பிரிட்டன் விரும்புகின்றது. இந்நிலையில், பகைமையில் சிக்கி கொண்டுள்ள பிரிட்டன் - சீன உறவை பிரிட்டன் மீளாய்வு செய்ய வேண்டும் என்று தி இண்டிபெண்டன்ட் எனும் பிரிட்டன் செய்தித்தாள் அண்மையில் வெளியிட்ட தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் இணைந்து சீனாவுடனான உறவை மோசமாக்கினால், பிரிட்டன் தேசிய நலன்களை இழக்கக்கூடும் என்று பிரிட்டனில் உள்ள சீனாவுக்கு எதிரான சக்திகளுக்கு இக்கட்டுரை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பிறகு, தாராள வர்த்தக உடன்படிக்கை பற்றிய பேச்சுவார்த்தை பட்டியலில், சீனா முன்னணியில் இருக்கிறது. இந்நிலையில், நாணயம் மற்றும் கல்வித் துறைகளை, மேலதிக சீன மக்களுக்கு திறந்து வைக்க பிரிட்டனின் தொடர்புடைய துறையினர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.

தற்போது பிரிட்டனின் பொருளாதார ஆற்றல், உலகளவில் முன்னணியில் இருக்கிறது. ஐ.நா பாதுகாப்பவையின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றான பிரிட்டனின் இராணுவ செலவு உலகளவில் ஐந்தாவது இடத்தை வகிக்கின்றது. அதே போன்று, கல்வி மற்றும் அறிவியல் தொழில் நுட்ப துறைகளில் பிரிட்டன் உலகளவில் முன்னணியில் உள்ளது.

இந்நிலையில், பிரிட்டன் பகுத்தறியும் மனப்பாங்கு மற்றும் நெகிழ்வுத் தன்மையுடன் செயல்பட்டால் ஒளிவீசும் எதிர்காலத்தை அடையலாம். அவ்வாறன்றி, நெடுநோக்கு பார்வையின்றி, சீனாவுடனான உறவை அனுகுவதில் தவறிழைக்கும் நிலையில் பிரிட்டன் அதிக நலன்களை இழக்கக்கூடும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்