அமெரிக்க அரசியல்வதிகளுக்கு சீனாவின் தக்க பதிலடி

மதியழகன் 2020-07-24 20:28:03
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

செங்து நகரிலுள்ள அமெரிக்கத் துணை தூதரகத்தின் இயக்கம் தொடர்பான அனுமதியை நீக்கம் செய்வதாக, சீன வெளியுறவு அமைச்சகம் 24ஆம் நாள் வெள்ளிக்கிழமை அமெரிக்க தூதரகத்துக்கு தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு, ஹூஸ்டனில் உள்ள சீன தூதரக வளாகத்தை மூட அமரிக்கா அறிவித்துள்ளது. எனவே, சீனாவின் இந்த முடிவு, அமெரிக்காவுக்கு தக்க பதிலடியாகும் என கருதப்படுகிறது.

அண்மையில், உள்நாட்டில் முரண்பாடுகளில் இருந்து மக்களை திசை திரும்பும் விதமாவும், தேர்தலுக்கான அரசியல் நோக்கத்துடனும், அரசியல், பொருளாதாரம், தூதாண்மை, ராணுவம் உள்ளிட்ட எல்லா துறைகளிலும் சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் அரசியல்வாதிகள் சிலர் செயல்பட்டு வருகின்றனர்.

இரு நாட்டு மக்கள் நட்பு வைத்து கொள்ளும் அடிப்படியில் இரு நாட்டுறவு சமூகமாக வளர்ந்து வரும் என்று பொதுவாக அறியப்படுள்ளது. அதைக் கருத்தில் கொண்டுள்ள சீனா, எப்போதும், நெடுநோக்குப் பார்வையில் சீன-அமெரிக்க உறவை பார்த்து வளர்த்து வருகிறது. மேலும், அமெரிக்காவுடன் புதிய பனிப் போர் தொடுக்க எந்த விதமான விருப்பம் இல்லாமல், சீனா ஆக்கப்பூர்வமான முறையில் கருத்து வேறுபாடுகளை கட்டுப்படுத்தி கையாண்டு வருகிறது.

இரு நாட்டுறவில் தற்போதுள்ள சூழலில் முன்பு இல்லாத அளவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சீன அரசு மற்றும் மக்களிடம் இருந்து பகுத்தறிவு வாய்ந்த தீர்வுகள் இன்னும் முன்வைக்கப்படும். ஏன்னென்றால், சீனா-அமெரிக்கா இடையே சீரான உறவு, இரு தரப்புக்கு நன்மை தருவது மட்டுமல்லாமல், உலகின் அமைதி மற்றும் நிலைப்புதன்மைக்கு துணை புரிவதாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, வாஷிங்டனில் உள்ள அரசியல்வாதிகள், அடிப்படை கோட்பாட்டைக் கைவிட்டு, சீனா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், தூதாண்மை உறவு நிறுவப்பட்ட பிறகு இப்பொழுது மிக கடுமையான அறைகூவல் காணப்படுகிறது. ஒத்துழைப்புடன் செயல்பட்டால், இரு தரப்பும் பயன் பெறும். சண்டை போட்டால், இரு தரப்புறவு பாதிப்புக்குள்ளாகும். எனவே, ஒத்துழைப்பு ஒன்றே சரியான தேர்வு என்பது, வரலாற்றுப் பாடமாகவும், எதிர்கால வழிகாட்டலாகவும் விளங்குகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்