ஊடகங்கள் ஏற்க வேண்டிய சமூகப் பொறுப்புகள்

வான்மதி 2020-07-25 18:33:07
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வளர்ந்த ஊடகங்களைக் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் சீனாவும் இந்தியாவும் உள்ளன. ஊடகங்களின் முகப்பு மற்றும் முக்கிய செய்திகள் வாசகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. ஆனால் தொழில்களில் ஒன்றான ஊடகத்தில் ஈடுபடும் பணியாளர்கள் வாழ்வதற்காக லாபம் பெற வேண்டும். இதற்காகவே வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதம் அதிர்ச்சி அல்லது பரபரப்பூட்டும் தலைப்பு வெளியிடப்படுவது உண்டு. ஆனால் தொழில்களில் சிறப்பாக இருக்கும் ஊடகம் ஒன்று, ஒருபுறம் பொது மக்களின் சார்பில் ஒலித்திட வேண்டும், மறுபுறம் பொது மக்களின் செயல்களைத் தூண்டிவிடுகிறது. சமூகத்துக்கு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய ஊடகம், எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவது வருத்தம் அளிப்பதாய் உள்ளது. அண்மையில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றில் குறிப்பிட்ட சில ஊடகங்களின் எதிர்மறைத் தாக்கம் மீண்டும் காணப்பட்டது. சீனா மற்றும் சீன உற்பத்திப் பொருட்களின் மீதான தடைக்கு அளிக்கப்பட்ட அவற்றின் ஆதரவு போன்ற கருத்துக்கள், சீன-இந்திய உறவைப் பாதிக்கும் முக்கிய காரணியாகும்.

ஜனநாயக இந்தியாவில் ஊடகங்களுக்குச் சுதந்திரம் உண்டு என்பதை ஏற்றுக் கொள்வதோடு, சீனாவின் ஊடகங்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் செயல்படுவதையும் மறுக்கவில்லை. இருப்பினும், அண்மையில் நிகழ்ந்த சீன-இந்திய எல்லை சம்பவம் குறித்து, சீன ஊடகங்கள் அனைத்தும் பொறுப்பற்ற எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை. ஊடகச் செய்திகள் பொது மக்களின் செயல்பாட்டுக்கு வழிகாட்டும் என்பதை தெளிவாக அறிந்து கொண்டுள்ளதால், செய்திகளை வெளியிடும் போது சீன ஊடகங்கள் எப்போதுமே கவனத்துடன் கூடிய நிலைப்பாட்டில் இருக்கின்றன.

மிகப் பெரிய வளரும் நாடுகளான சீனாவும் இந்தியாவும், பொருளாதாரத்தை வளர்ப்பது, மக்கள் வாழ்வை மேம்படுத்துவது உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை எதிர்கொள்கின்றன. இருநாடுகளிடையே சர்ச்சை ஏற்பட்டால், செழுமை மற்றும் வளர்ச்சி அடையும் நமது கனவுதான் பாதிக்கப்படும். இறுதியில் நன்மை பெறும் தரப்பு, சீனா-இந்தியா இடையே எதிரெதிர் நிலையைத் தூண்டிவிடும் சக்தி மட்டும் அல்லவா? சீனாவும் இந்தியாவும் கை கோர்த்துக் கொண்டு கூட்டாக வளர வேண்டும். பெரிய உலகில் இருநாடுகளின் கூட்டு வளர்ச்சியை ஏற்றுக் கொள்ள முடியும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும் பலமுறை தெரிவித்துள்ளனர். எல்லைப் பிரச்சினையை உரிய முறையில் தீர்க்க இருநாடுகளுக்கும் அறிவும் திறமையும் உண்டு என நம்புகிறோம். ஊடகங்கள் இப்போக்கில் சீரான சூழலின் உருவாக்கத்தை மேம்படுத்த வேண்டும். ஒரு நாடு இருளுள் சிக்கிக் கொள்வதை தவிர்த்து, ஒளி திசை நோக்கி முன்னேற மக்களுக்குத் தலைமை தாங்குவதுதான், வேறுபட்ட அமைப்புமுறையிலான ஊடகங்களின் பொதுக் கடமை.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்