பாம்பியோவின் பனிப்போர்ச் சிந்தனை உலக அமைதிக்குப் பாதிப்பு

ஜெயா 2020-07-27 14:45:23
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அண்மையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ கலிஃபோர்னியாவில் உரையாற்றிய போது, “சீனா அச்சுறுத்தல்” என்ற கருத்தைப் பெரிதும் பரப்பினார். ஆனால், உண்மையில் “வரலாற்றில் மிக மோசமான வெளியுறவு அமைச்சர்” என்று அழைக்கப்படும் அவரது பனிப்போர் சிந்தனைதான் உலக அமைதிக்கு மாபெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

அவரது உரையில், சீன-அமெரிக்க இடையேயான இயல்பான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை சந்தேகித்துள்ளார். மேலும் அதன் மூலம் சீனா அனைத்து நலன்களையும் பெற்றுள்ளது என்று அவர் கருதுகிறார்.

ஆனால், இது உண்மை அல்ல. ஒரு புறம், சீனாவில் முதலீடு செய்யும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலைகளை நிறுவி, தேவையான குறிப்பிட்ட தாழ்ந்த விலையிலான பொருட்களைப் பெற முடியும். மற்றொரு புறம், விலை குறைந்த சீன தயாரிப்புக்கள் உலகப் பண வீக்க நிலையைப் பெரிதும் குறைத்து, நுகர்வோருக்கு சலுகை வழங்கியதோடு, முதலீட்டாளர்களுக்கு மேலதிக நலன்களைப் பெறச் செய்ய முடியும். இதன் மூலம், பாம்பியோ கூறிய ”அமெரிக்கர்களின் வாழ்க்கை முறைக்கான அச்சுறுத்தலான” சீனா, உண்மையில் இந்த வாழ்க்கை முறைக்கான உத்தரவாதம் ஆகும் என்று தெரியப்படுகிறது.

மேலும் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள் சம்பவத்துக்குப் பின், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பாதுகாப்புத் துறையில் சீனா மற்றும் அமெரிக்கா பயனுள்ள முறையிலான ஒத்துழைப்பு மேற்கொண்டது முதல், 2008ஆம் ஆண்டு உலக நாணய நெருக்கடி நிகழ்ந்த பின், இரு நாடுகள் கொள்கை ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, பல விடயங்களில் பரந்த ஒத்துழைப்பு மேற்கொள்வது வரை, உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

வெளிப்படையாக, பாம்பியோ, மோதலை உருவாக்குவதன் மூலம் சீனாவைத் தனிமைப்படுத்துவது, அமெரிக்க மக்கள் உள்ளிட்ட உலக பன்னாட்டு மக்களின் சொந்த நலன்களுக்குப் பயனளிக்காது. அவரின் இத்தகைய செயல் உலக செய்தி ஊடகங்களில் கண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக, சீன-அமெரிக்க ஒத்துழைப்பு இருத்தரப்புகளுக்கு வழங்கிய நன்மைகளை அமெரிக்க அரசு புறக்கணித்துள்ளதாக பலர் குற்றம் சாட்டியுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்