புதிய ரக கரோனா வைரஸ்களின் தொகுதி, வவ்வால்களிடையே பல பத்தாண்டுகளாக பரவயிருப்பதற்கான சாத்தியம்: ஆய்வு முடிவு

மதியழகன் 2020-07-30 10:25:35
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கொவைட்-19 தொற்று நோயை ஏற்படுத்திய சார்ஸ்-கோவ்-2 எனும் கரோனா வைரஸ், 40 முதல் 70 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அவ்வைரசை மிக நெருக்கமாக ஒத்திருக்கும் வைரஸ் ஒன்றின் அடிப்படையில் மாறி வளர்ந்து வருவதாகும். இந்த வகையான வைரஸ், வவ்வால்களிடையே பல பத்தாண்டுகளாக பரவி வந்துள்ளன என்று நேச்சர் பயோடெக்னாலஜி என்ற இதழின் இணையதளத்தில் ஜுலை 28ஆம் நாள் வெளியான ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சீனாவின் ஹாங்காங் ஆகியவற்றில் உள்ள பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பன்னாட்டு ஆய்வாளர்கள் குழு இந்த ஆய்வு சாதனையை வெளியிட்டதோடு, வைரஸ் தோற்றம் குறித்த ஆய்வு, எதிர்காலத்தில் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கு மிகவும் அவசியமானது என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

முன்னதாக, கரோனா வைரசானது ஆய்வகத்தில் இருந்து உருவானது அல்லது சதித்திட்ட நோக்குடன் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டது என்பன போன்ற கூற்றுக்களுக்கு ஆதாரமில்லை என்பதை இந்த ஆய்வு முடிவு மெய்ப்பித்துள்ளாதக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்