மக்கள் மக்களின் நலன் மற்றும் நாட்டின் அமைதியைப் பேணிக்காக்கும் சீன ராணுவப் படை

2020-08-01 19:16:18
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இவ்வாண்டின் ஆகஸ்ட் முதல் நாள், சீன மக்கள் விடுதலைப் படை நிறுவப்பட்ட 93ஆவது ஆண்டு நிறைவாகும். கடந்த 93 ஆண்டுகளாக, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், சீன ராணுவப் படை, தேசிய சுதந்திரம், மக்கள் விடுதலை மற்றும் நவ சீனா உருவாக்கம் போன்றவற்றில் சிறப்பான சாதனைகளைப் படைத்துள்ளது. நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களுக்கும், உலக அமைதி மற்றும் நிதானத்துக்கும் முக்கிய பங்காற்றியுள்ளது.

இவ்வாண்டின் துவக்கத்தில், எதிர்பாராமல் நிகழ்ந்த கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பணிக்காக, சீன ராணுவப் படை மிக வேகமாக வூஹானுக்குச் சென்று, 4000க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களை அனுப்பியுள்ளது.

அதற்குப் பிறகு, சீனாவின் தென் பகுதியிலுள்ள பல இடங்களில் கடும் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது, சீன ராணுவப் படை இயற்கைச் சீற்றம் நிகழ்ந்த இடங்களில் மீட்புதவிப் பணியில் ஈடுபட்டு, மக்களை பாதுகாத்தனர்.

அதே வேளை, சீன இராணுவப் படை, உலக அமைதியைப் பேணிக்காக்கும் உறுதியான ஆற்றலாகும். நவ சீனா நிறுவப்பட்ட பின், கடந்த 71 ஆண்டுகளாக, எந்த போர் அல்லது ஆயுத மோதல்களை அது முன்நின்று நடத்தவில்லை. எந்த ஒரு நாட்டையும் ஆக்கிரமிக்கவில்லை. பிற நாட்டின் உரிமைப் பிரதேசத்தைப் கைப்பற்றவில்லை. எப்போதுமே தற்காப்பு ரீதியான தேசியப் பாதுகாப்புக் கொள்கையைப் பின்பற்றி வருகிறது. அமைதிக் காப்பு விடயங்களுக்குப் பொறுப்பேற்கும் ஐ.நாவின் துணை தலைமைச் செயலாளர் ஜூன் பியெர்ரே லக்ரோய்ஸ் கூறுகையில், சீனாவின் அமைதிக் காப்புப் படை வீரர்களின் உயர்வான குணம் மற்றும் நிலையான ஆயுதங்கள் முதல் தரமாக உள்ளன. அமைதிக் காப்பு இலட்சியத்துக்கான சீனாவின் பங்கு வெகுவாகப் பாராட்டத்தக்கது என்று கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்