மனித உரிமையில் இரட்டை வரையறைக்கு சீனா எதிர்ப்பு: ஷிச்சின்பிங்

ஜெயா 2020-09-15 09:46:49
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், 14ஆம் நாள் ஜெர்மன் தலைமையமைச்சர் ஏஞ்சலா மெர்கல் அம்மையார், ஐரோப்பிய பேரவைத் தலைவர் மிஷேல், ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் வான் டேர் லேன் ஆகியோருடன், காணொலி வழியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஷிச்சின்பிங் கூறுகையில், மனித உரிமைத் துறையில் அனைத்து நாடுகளுக்கும் பொருந்திய ஒரே ஒரு சரியான வளர்ச்சிப் பாதை இல்லை. பல்வேறு நாடுகள் முதலில் சொந்த விஷயங்களில் செவ்வனே கவனம் செலுத்த வேண்டும். இதில் இரட்டை வரையறையைக் கடைப்பிடிப்பதை சீனா எதிர்க்கிறது. ஐரோப்பாவுடன் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளிக்கும் கோட்பாட்டைப் பின்பற்றி, பரிமாற்றத்தை வலுப்படுத்தி, கூட்டாக முன்னேற சீனா விரும்புகின்றது என்று தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்