இந்தியப் பொருளாதாரம் 9 விழுக்காடு குறைய வாய்ப்பு

பண்டரிநாதன் 2020-09-15 10:24:38
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவில் கொவைட்-19 நோய் பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தனியார் நுகர்வு மற்றும் முதலீடு நீண்ட காலத்துக்குக் குறையும். இதனால், 2020-21 நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காடு வரை குறைய வாய்ப்புண்டு என எஸ் & பி சர்வதேச தர நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இத்தர நிறுவனம் கடந்த மே மாதம் வெளியிட்ட கணிப்பில் பொருளாதார வளர்ச்சி 5 விழுக்காடு வரை சுருங்கும் என மதிப்பிட்டிருந்தது. ஆனால், அதன் பிறகு, இந்தியாவில் நோய் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது உலக அளவில் இந்தியா 2ஆவது இடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தியப் பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காடு வரை குறைய வாய்ப்புண்டு என்று எஸ் & பி சர்வதேச தர நிறுவனம் கணித்துள்ளது.

இந்தியப் பொருளாதார வளர்ச்சியானது நடப்பு நிதியாண்டில் 11.5 விழுக்காடு குறையும் என்று மூடி நிறுவனமும், 10.5 விழுக்காடு குறையும் என்று ஃபிட்ச் நிறுவனமும் கடந்த வாரம் கணிப்புகளை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்