சீன-ஐரோப்பிய பேச்சுவார்த்தை

ஜெயா 2020-09-15 10:54:03
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், 14ஆம் நாள் ஜெர்மன் தலைமையமைச்சர் ஏஞ்சலா மெர்கல் அம்மையார், ஐரோப்பிய பேரவைத் தலைவர் மிஷேல், ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் வான் டேர் லேன் ஆகியோருடன், காணொலி வழியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

புதிய ரக கரோனா வைரஸ் பரவலினால், கடந்த நூறு ஆண்டுகளில் கண்டிராத பெரும் மாற்றம் வேகமாக முன்னேறி வருகிறது. மனித குலம் புதிய குறுக்கு பாதையில் நின்றுள்ளது. சீனாவும் ஐரோப்பிய தரப்பும் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவின் சீரான வளர்ச்சியை உறுதியாக முன்னேற்ற வேண்டும் என்றும், அமைதியான சகவாழ்வு, வெளிநாட்டுத் திறப்பு மற்றும் ஒத்துழைப்பு, பலதரப்புவாதம், பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு ஆகியவற்றில் ஊன்றி நிற்க வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

ஹாங்காங், சின்ஜியாங் ஆகிய பகுதிகளின் தொடர்புடைய பிரச்சினைகளில் சீனாவின் நிலைப்பாட்டை ஷிச்சின்பிங் எடுத்துக் கூறினார். சீனாவில் நிதானமற்ற நிலைமை, பிரிவினை மற்றும் கலவரத்தை உண்டு செய்ய முயற்சிக்கும் எந்த நபரையும், சக்தியையும் சீனா கடுமையாக எதிர்க்கிறது. மேலும், சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடும் எந்தவொரு நாட்டையும் சீனா எதிர்க்கும் என்று அவர் தெரிவித்தார்.

ஷிச்சின்பிங் மேலும் கூறுகையில், மனித உரிமைத் துறையில் அனைத்து நாடுகளுக்கும் பொருந்திய ஒரே ஒரு சரியான வளர்ச்சிப் பாதை இல்லை. பல்வேறு நாடுகள் முதலில் சொந்த விஷயங்களில் செவ்வனே கவனம் செலுத்த வேண்டும். இதில் இரட்டை வரையறையைக் கடைப்பிடிப்பதை சீனா எதிர்க்கிறது. ஐரோப்பாவுடன் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளிக்கும் கோட்பாட்டைப் பின்பற்றி, பரிமாற்றத்தை வலுப்படுத்தி, கூட்டாக முன்னேற சீனா விரும்புகின்றது என்றும் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்