மீட்சியடையும் சீனப் பொருளாதாரம்:உலகத்திற்கு நல்ல செய்தி

சரஸ்வதி 2020-09-15 19:51:15
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் 15ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, ஆகஸ்ட் திங்களில், சீனப் பொருளாதாரம், கரோனா வைரஸ் பரவல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளைச் சமாளித்துள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முக்கிய குறிக்கோளை எட்டும் வகையில், சீனப் பொருளாதாரத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. உலகப் பொருளாதாரத்தின் மீட்சிக்கு இது நல்ல செய்தியைக் கொண்டு வந்துள்ளது.

புதிய ரக கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, உலகப் பொருளாதாரம் மந்தமான நிலையில் உள்ளது. இதன் வளர்ச்சிக்கான நிதானமற்ற தன்மை தெளிவாக அதிகரித்துள்ளது. உலக வங்கி ஜூன் திங்களில் வெளியிட்டுள்ள உலகப் பொருளாதாரம் மீதான முன்னோட்ட அறிக்கையின்படி, 2020ஆம் ஆண்டில், உலகப் பொருளாதாரம் 5.2 விழுக்காட்டாக வீழ்ச்சியடையும். இப்பின்னணியில், கரோனா வைரஸ் பரவலை சீராகக் கட்டுப்படுத்தி, பொருளாதாரத்தில் மீட்சியடையும் சீனா மீது அதிகமான எதிர்பார்ப்பு கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்