இந்திய-அமெரிக்கா அறிக்கை – பாகிஸ்தான் நிராகரிப்பு

பண்டரிநாதன் 2020-09-16 10:47:37
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவும், அமெரிக்காவும் தீவிரவாதம் குறித்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில் பாகிஸ்தான் பற்றி எவ்வித ஆதாரமும் இன்றி குறிப்பிடப்பட்டுள்ளதை ஆணித்தரமாய் நிராகரிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

தீவிரவாத எதிர்ப்புக்கான இந்தியா மற்றும் அமெரிக்காவின் கூட்டு செயற்குழு மற்றும் இருதரப்புப் பேச்சுவார்த்தையின் 7ஆவது கூட்டம் காணொளி வழிமுறையில் கடந்தவாரம் நடைபெற்றது. அதில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியைப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்திடும் விதம் அந்நாட்டு அரசு விரைவான மற்றும் நீடித்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அத்துடன், தீவிரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் விரைவாக நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

இதனை, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. மேலும், எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடு பாகிஸ்தான். தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கை, அர்ப்பணிப்பு ஆகியவற்றை சர்வதேச சமூகம் அங்கீகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்