தொடர்ந்து மீட்சிபெற்று வரும் சீன பொருளாதாரம்

ஜெயா 2020-09-16 11:04:01
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசு 15ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, சீன பொருளாதாரம் தொடர்ந்து மீட்சியடைந்து வருகிறது. முதலில், உள்நாட்டுத் தேவையின் மேம்பாடு, மீட்சிக்கு அடிப்படையிட்டுள்ளது. இவ்வாண்டின் ஆகஸ்ட் திங்களில், சீன சமூக நுகர்வு பொருட்களின் சில்லறை விற்பனைத் தொகை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 0.5 விழுக்காடு அதிகம். இவ்வாண்டில் தோன்றிய முதல் முறையான அதிகரிப்பு இதுவாகும். மேலும், தொழில் நிறுவனங்கள் மீண்டும் இயக்கத்தை விரைவுபடுத்துவது, பொருளாதார அதிகரிப்பை முன்னேற்றியுள்ளது. ஆகஸ்ட் இறுதிக்குள், இயக்கத்துக்கு வந்த பொருட்கள் விற்பனை மற்றும் உணவு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, ஜுலையில் இருந்ததை விட அதிகரித்துள்ளது. இதைத் தவிர, அண்மையில் திரைப்படம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றுக்கு அனுமதி, நுகர்வு அதிகரிப்புக்கு வலிமையான ஆதரவு அளித்துள்ளது. சீனாவின் பாரம்பரிய காதலர் விழா அன்று மட்டும் திரைப்பட வருமானம் 50 கோடி யுவானைத் தாண்டியது.

சீனப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்துடன் ஆழமாக இணைந்துள்ளது. வெளிநாட்டுத் திறப்பில் ஊன்றி நிற்கும் சீனாவின் பொருளாதாரத்தின் மீட்சி, வைரஸ் பரவல் காலத்தில் மோசமான உலகப் பொருளாதாரத்துக்கு நம்பிக்கையையும் உந்து சக்தியையும் அளித்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்