சீனாவுக்கு ஐ.நா மனித உரிமைச் செயற்குழுப் பிரதிநிதிகளின் ஆதரவு

ஜெயா 2020-09-16 16:15:33
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐ.நா மனித உரிமைச் செயற்குழுவின் 45ஆவது மனித உரிமை பற்றிய விவாதக் கூட்டத்தில், பல நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஹாங்காங், சின்ஜியாங் முதலிய பிரச்சினைகளில் சீனாவுக்கு ஆதரவளித்தனர்.

இது பற்றி, வெனிசுலா பிரதிநிதி ஒருவர் கூறுகையில், இரட்டை வரையறையையும், மனித உரிமைப் பிரச்சினையை அரசியல்மயமாக்குவதையும் கடுமையாக எதிர்பபதாகத் தெரிவித்தார்.

புருண்டி பிரதிநிதி பேசுகையில், ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தில் தேசிய பாதுகாப்பைப் பேணிக்காக்கும் வகையில் சீனா சட்டம் வகுத்திருப்பதற்குப் புருண்டி வரவேற்பு தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.

எத்தியோபியா, மியன்மார், வட கொரியா, சிரியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள், ஹாங்காங் மற்றும் சின்ஜியாங் உள்ளிட்ட சீனாவின் உள்விவகாரங்களில் சில நாடுகள் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்