பல தரப்புவாதத்தின் மூலம் ஒரு தரப்புவாதம் ஒடுக்கப்பட வேண்டும்:ஐ.நா

சரஸ்வதி 2020-09-16 20:44:18
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

புதிய ரக கரோனா வைரஸ் உலகளவில் கடுமையாகப் பரவி வரும் நிலையில், ஒரு தரப்புவாதம் தலைத்தூக்கி, வர்த்தகப் பாதுகாப்புவாதம் தொடர்ச்சியாக நிலவி வருகிறது. தற்போது உலகம், பல கடும் அறைகூவல்களை எதிர்நோக்குகிறது. 75ஆவது ஐ.நா பொது பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 15ஆம் நாள் காணொலி வழியாக துவங்கியது. பல அச்சுறுத்தல் மற்றும் அறைகூவல்களை எதிர்நோக்கும் சர்வதேசச் சமூகம், பல தரப்புவாதத்தை மேலும் உறுதியாக பேணிக்காத்து, ஒரு தரப்புவாதத்தை எதிர்த்து, ஐ.நாவின் நம்பிக்கையை நிலைநாட்ட வேண்டும் என்று ஐ.நாவின் தலைமைச் செயலாளர் குட்ரெஸ், 75ஆவது ஐ.நா பொது பேரவைத் தலைவர் போஸ்கிர் இருவரும் முறையே வலியுறுத்தினர்.

20 ஆயிரம் கோடி அமெரிக்க டாலருக்கு மேலான சீன வணிகப் பொருட்கள் மீது சுங்க வரியை அமெரிக்கா வசூலிப்பது, சட்டத்திற்குப் புறம்பானது என்று அதே நாளில் உலக வர்த்தக அமைப்பு தீர்ப்பு அளித்துள்ளது. இந்நியாயமான தீர்ப்பு, பல தரப்புவாதத்தைப் பயன்படுத்தி, ஒரு தரப்புவாதத்தை வலிமையாக எதிர்த்ததால் கிடைத்ததாகும் என்று சர்வதேசச் சமூகத்தில் பொதுவாகக் கருதப்படுகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்