சர்வதேச ஒத்துழைப்பில் ஐ.நாவின் பங்களிப்பிற்குச் சீனா ஆதரவு

ஜெயா 2020-09-17 10:13:12
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன டெய்லி நியூஸ் செய்தி ஊடகம் 16ஆம் நாள் நடத்திய ”சீனாவும் ஐ.நாவும்: வறுமை ஒழிப்பு, அமைதி வளர்ச்சி” என்ற இணையவழி நிகழ்ச்சியில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் துணை அமைச்சர் மா சாவ்சியூ கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் பேசுகையில், ஐ.நா உருவாக்கப்பட்ட கடந்த 75 ஆண்டுகளில், அவ்வமைப்பானது மிக அதிக பிரதிநிதித்துவம் மற்றும் அதிகாரத் தன்மை, மிக முழுமையான அமைப்பு முறை ஆகியனவற்றைக் கொண்ட சர்வதேச ஒத்துழைப்பு மேடையாகத் திகழ்ந்து அமைதி மற்றும் நிதானத்துக்கும், கூட்டு வளர்ச்சியை முன்னேற்றுவதற்கும் முக்கியப் பங்காற்றி வருவதாகப் பாராட்டுத் தெரிவித்தார். கரோனா வைரஸ் இன்னும் பரவி வரும் நிலையில், உலகில் கடந்த நூற்றாண்டில் காணாத மிகப் பெரும் மாற்றம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில், பலதரப்புவாதத்தை நிலைநிறுத்தும் பொருட்டு ஐ.நா முக்கியப் பங்காற்றுவதற்கு நாம் உறுதியான ஆதரவையளித்து, மனித குலப் பொது சமூகத்தை உருவாக்குவதை முன்னேற்ற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்