ஐ.நா மனித உரிமைச் செயற்குழுவின் உறுப்பினராக சீனா மீண்டும் தேர்வு

ஜெயா 2020-10-14 09:41:48
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அக்டோபர் 13ஆம் நாள் 75ஆவது ஐ.நா பேரவையில் மனித உரிமைச் செயற்குழுவின் உறுப்பு நாடாக சீனா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 2021 முதல் 2023 ஆம் ஆண்டு வரை சீனா இப்பதவியில் இருக்கும்.

சீனா, இந்தப் பதவியை வாய்ப்பாகக் கொண்டு, பலதரப்புவாதத்தில் தொடர்ந்து உறுதியாக ஊன்றி நின்று, ஐ.நா சாசனத்தின் குறிக்கோள் மற்றும் கோட்பாட்டை உறுதியாகப் பேணிக்காக்கும். மேலும், மனித உரிமைச் செயற்குழுவின் பணியில் ஆழமாக ஈடுபட்டு, சர்வதேச மனித உரிமைப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை ஆக்கப்பூர்வமாக முன்னேற்றி, சர்வதேச மனித உரிமை இலட்சியம் சீராக வளர்வதை முன்னேற்றுவதற்கு மேலதிக பங்கும் ஆற்றும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்