சீன - ஈக்குவடோரியல் கினி தலைவர்கள் வாழ்த்துப் பரிமாற்றம்

ஜெயா 2020-10-15 09:29:45
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் ஈக்குவடோரியல் கினி அரசுத் தலைவர் ஒபியாங்கும் இரு நாட்டுத் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அக்டோபர் 15ஆம் நாள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

ஷிச்சின்பிங் வாழ்த்து தெரிவித்த போது கூறுகையில், ஈக்குவடோரியல் கினியுடனான உறவின் வளர்ச்சியில் சீனா வெகுவான கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார். மேலும், இரு நாடுகள், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கூட்டுக் கட்டுமானத்தையும், சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் கட்டுக்கோப்புக்குள் பயனுள்ள ஒத்துழைப்பையும் கூட்டாக ஆழமாக்கி, இரு நாட்டுறவு புதிய கட்டத்தில் நுழைவதைத் தூண்ட விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

ஒபியாங் கூறுகையில், ஈக்குவடோரியல் கினி, இரு நாட்டுறவின் வளர்ச்சியில் மனநிறைவு அடைந்துள்ளதாகவும், ஒத்துழைப்பை விரிவாக்கி, இரு நாட்டு நட்பார்ந்த உறவை மேலும் வலுப்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்