புதுமையாக்கத்தைக் கடைப்பிடித்து அதிசயம் பெறும் ஷென்சென்

மதியழகன் 2020-10-15 21:09:33
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

40 ஆண்டுகளில் ஒரு சிறிய ஊராக இருந்த ஷென்சென் தற்போது அறிவியல் தொழில் நுட்ப நகரமாக மாறியுள்ளது. இந்தப் பெரிய முன்னேற்றம் படைத்ததற்கு முக்கிய ஆதாரமாக புதுமையாக்கம் கருதப்படுகிறது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 14ஆம் நாள் ஷென்சென் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்டதன் 40ஆம் ஆண்டு நிறைவு மாநாட்டில் இந்த அனுபவங்களைக் குறிப்பிட்டார்.

40 ஆண்டுகளுக்கு முன்பு, ஷென்சென் நகரம் அமைக்கப்பட்டபோது, அறிவியல் தொழில் நுட்பத்தில் வறட்சி நிலவியது. முழு நகரத்திலும், இரண்டு பொறியியலாளர்கள் மட்டுமே இருந்தனர். அறிவியல் தொழில் நுட்ப வளங்கள் ஏதுவும் இல்லாமல் இருந்த ஷென்சென் நகரில் இன்று புதுமையாக்கத்தில் முன்னோடியாக முன்னேறி உள்ளது. அங்கு, 30ஆயிரத்துக்கும் அதிகமான அறிவியல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளன. புதிய உயர் தொழில் நுட்ப தொழில்கள், ஷென்சென் விரைவாக வளர்ந்து வருவதற்கான முக்கிய உந்து சக்தியாக விளங்கும். 2019ஆம் ஆண்டு 10ஆயிரம் பேருக்கு சராசரியாக கிடைத்துள்ள கண்டுபிடிப்புக் காப்புரிமைகளின் எண்ணிக்கை, 106.3ஆகும். இந்த எண்ணிக்கை, நாடு முழுவதிலும் இருந்த நிலையை விட 8 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சீர்திருத்தம் மற்றும் திறப்பு, ஷென்செனில் புதுமையாக்கம் செய்வதற்கு சாதமான சூழலை உருவாக்கியது. 40 ஆண்டுகளில், ஷென்சென், உலகப் பொருளாதாரத்தில் ஒன்றாக இணைந்ததோடு, உலகப் பொருளாதாரத்துக்கு சேவை புரிவதாகவும் செயல்பட்டு வருகிறது.

எதிர்காலத்தில், மேலும் உயர் மட்டத்தில் சீர்திருத்தம் மற்றும் திறப்பை முன்னெடுத்துச் செல்லும் ஷென்சென், திறந்த நிலை உலகப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு பெரிய பங்ளிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்