சீனாவின் வறுமையான மாவட்டங்களில் இணையவழி விற்பனை நிலைமை

ஜெயா 2020-10-16 09:53:20
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

செப்டம்பர் திங்களின் இறுதிவரை சீனாவில் உள்ள 832 தேசிய நிலை வறுமை மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள இணைய வழிக் கடைகளின் எண்ணிக்கை 30 இலட்சத்து 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக சீன வணிகத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் காவ்ஃபேங் 15ஆம் நாள் தெரிவித்தார்.

இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், இந்த வறுமையான மாவட்டங்களில் நடைபெற்ற வேளாண் உற்பத்திப் பொருட்களின் இணைய வழி சில்லறை விற்பனைத் தொகை 2 ஆயிரத்து 642 கோடி யுவானை எட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 48.1 விழுக்காடு அதிகம். இவற்றில், மூலிகை மருந்துகள், பழங்கள், தேயிலை ஆகிய பொருட்கள் விற்பனைத் தொகையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்