தன்னை தனிமையில் சிக்கிக் கொள்ளும் அமெரிக்க அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல் ரீதியிலான கொள்கைகள்!

மதியழகன் 2020-10-16 20:22:45
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தொலைத்தொடர்பு வலையமைப்பில் இருந்து சீன நிறுவனங்களை நீக்கும் அமெரிக்காவின் திட்டத்தில் ஜப்பான் தற்போது பங்கெடுக்கப் போவதில்லை என்று ஜப்பான் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக, ஜப்பானின் யோமியுரி ஷிம்பான் என்று செய்தித்தாள் 16ஆம் நாள் செய்தி வெளியிட்டது. இதற்கு முன்பு, தென்கொரியா-அமெரிக்கா இடையே 14ஆம் நாள் நடைபெற்ற 5ஆவது நெடுநோக்குப் பொருளாதாரப் பேச்சுவார்த்தையில், தொழில் நிறுவனம் முடிவு எடுப்பது என்ற பெயரில், ஹுவாவெய் நிறுவனத்தை 5ஜி வலையமைப்பில் இருந்து நீக்க வேண்டுமென கோரிக்கையை தென்கொரிய அதிகாரி மறுத்தார்.

சொந்த சுயநலன்களுக்காக, அமெரிக்க அரசியல்வாதிகள், தனது கூட்டணி நாடுகள் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதில் தோல்வியை சந்தித்துள்ளது. பலதரப்புவாதத்தைப் பின்பற்றி, பரஸ்பர நலன் தந்து கூட்டு வெற்றி பெறும் உலகமயமாக்கச் சூழலில், அச்சுறுத்தல் ரீதியிலான வெளியுறவுக்கொள்கைக்கு எதிர்காலம் இல்லை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

கடந்த ஓராண்டுக்காலத்தில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்காவில் எங்கும் சீனா மீது அவதூறு பரப்பிப் பேசுவது தனதுப் பயணத்தில் மைய அம்சமாகும். அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரிட்டதால், சில நாடுகள் கவனமாக இருக்கும். இருப்பினும், அதிக நாடுகள், பகுத்தறிவு வாய்ந்த முடிவு எடுக்கும். மைக் பாம்பியோ போன்ற அரசியல்வாதிகளின் தந்திரத்தைத் தெரிந்து கொண்ட பல நாடுகளுக்கு சரியான தேர்வு நடத்துவது என்பது தெளிவானது.

சீனாவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்குவதைத் தவிர்த்து, பிற விவகாரங்களில் தலையிடும் அமெரிக்க அரசியல்வாதிகள், தன்னை தலைமையாகக் கொண்டு, கூட்டணி நாடுகள் உள்ளிட்ட பிற நாடுகளையும் அடிபணிய செய்ய நினைக்கிறது. எடுத்துக்காட்டாக, ரஷியாவின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில், கூட்டணி நாடான ஜெர்மனியின் நலன்களை முற்றிலும் பொருட்படுத்தாமல், ஜெர்மனி-ரஷியா இடையே நார்ட் ஸ்ட்ரீம் 2 எனும் எரிவாயு குழாய் திட்டத்தை தடை செய்து விடுவதாக, அமெரிக்க அச்சுறுத்தல் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்