கருத்து

 • உலக வறுமை ஒழிப்புக்குச் சீனாவின் பங்களிப்பு

  சீனாவில் கொடிய வறுமை ஒழிக்கப்பட்டது என்று 25ஆம் நாள் சீனா அறிவித்தது. ஐ.நா.வின் 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலில் நிர்ணயிக்கப்பட்ட வறுமை ஒழிப்பு இலக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே சீனா நிறைவேற்றியுள்ளது.

 • பொய் செய்தியைத் தோற்கடிக்கும் சின்ஜியாங்கின் உண்மைகள்

  பிரான்ஸின் புகழ்பெற்ற எழுத்தாளர் மேக்சிம் விவாஸ் உய்கூர் இனம் பற்றிய பொய் செய்தியின் முடிவு எனும் புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டார். இப்புத்தகத்தில் அவர் சின்ஜியாங்கில் நேரில் அனுபவித்த விஷயங்களின் மூலம், மேலை நாடுகளின் சில செய்தி ஊடகங்கள் சின்ஜியாங் பற்றி இயற்றிய பொய்களை வெளிப்படுத்தினார்

 • நவீனத் தொழில் நுட்பத்தோடு இயற்கை விவசாயம் சார்ந்து முன்னேறி வரும் சீனா

  ஒரு நாடு சிறந்த வளர்ச்சியை அடைய வேண்டுமானால் கிராமப் புறங்கள் நன்கு வளர்ச்சியடைய வேண்டும். கிராமப்புறங்கள் வளர வேண்டுமாயின் கிராமங்களின் முக்கியத் தொழிலாக இருந்து வரும் விவசாயம் வளர வேண்டும். குறிப்பாக சீனா, இந்தியா போன்று பெரும் மக்கள் தொகை கொண்ட நாடுகளில் விவசாயத்துறை சார்ந்து காலந்தோறும் பல்வேறு மாற்றங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக பயிரிடும் நிலப்பரப்பு குறைந்து வருதல், போதிய வருமானம் இல்லாததால் விவசாயிகள் பிற பணிகளுக்குச் சென்றமை என அண்மைக்காலமாக விவசாயம் சந்தித்து வரும் பிரச்சினைகள் ஏராளம். இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்ய வேண்டுமானால் பாரம்பரியத் தொழிலான வேளாண் துறையில் நவீனத் தொழில்நுட்பங்களைப் புகுத்த வேண்டியது மிக மிக அவசியம். இந்த அவசியத்தை உணர்ந்தே சீன நடுவண் அரசு அண்மையில் விவசாயம் தொடர்பாக 2021ஆம் ஆண்டுக்கான “ஒன்றாம் எண் ஆவணம்’’ ஒன்றை வெளியிட்டுள்ளது. வேளாண்மை மற்றும் ஊரகப் பகுதிகளின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் இந்த ஆவணம் முதன்முதலாக 2004ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 18 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக இவ்வாவணம் வெளியிடப்பட்டு வருகின்றது. கிராமப்புறங்களின் உயிராற்றலை முன்னெடுத்துச் செல்வது, வேளாண் துறையில் நவீனமயமாக்கத்தைத் துரிதப்படுத்துவதன் வழி விவசாயிகளுக்கு அருமையான எதிர்காலத்தை வழங்குவது ஆகியனவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு 2021ஆம் ஆண்டின் “ஒன்றாம் எண் ஆவணம்’’  உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சீன அரசால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் இத்தகு முயற்சியால் உலகளவில் விவசாயத்துறை சார்ந்து பெரும் வருமானம் பெறும் நாடுகளில் முதலாவது இடத்தில் சீனா உள்ளது. சீனாவுக்கு அடுத்த நிலையில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.உலகின் மிகப் பெரிய விவசாய நாடாகத் திகழும் சீனாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் கிட்டதட்ட 55 கோடி மக்கள் கிராமப்புறங்களில் வாழ்பவர்களாகவும் அவர்களுள் பெரும்பான்மையோர் விவசாயப் பணிகளை மேற்கொள்பவர்களாகவும் இருக்கின்றனர். எனவே, சீன அரசானது வேளாண்மை மற்றும் ஊரகப் பகுதிகளின் முன்னேற்றத்திற்குத் தொடர்ந்து அதிக முக்கியத்துவத்தை அளித்து வருகின்றது. புள்ளிவிவரங்களின் படி, சீனாவின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் சுமார் 54.8 விழுக்காட்டு நிலமானது விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. மாறுபட்ட காலநிலைகளைக் கொண்ட சீனாவில் கோதுமை, அரிசி, தேயிலை, பால் பொருட்கள், தானியங்கள் ஆகியன அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றுள் சுமார் 20 விழுக்காட்டுப் பொருட்களானவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலகின் மிகப் பெரும் விவசாய நாடு என்னும் பெருமைக்குரிய சீனாவின் மொத்த வருமானத்தில் சற்றேறக்குறைய 68 இலட்சம் கோடி ரூபாய் விவசாயத்தின் மூலம் மட்டுமே கிடைக்கின்றது.சீனாவைப் போன்றே பெரும் விவசாய நாடாகத் திகழும் இந்தியாவில் கிட்டதட்ட 70 சதவீத மக்கள் கிராமப்புறங்களில் வாழ்ந்து வருவதாகவும் அவர்களில் 50 விழுக்காட்டினர் விவசாய வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கின்றது. அரிசி, பருப்பு, கோதுமை, பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உற்பத்தி செய்யும் இந்தியா வெங்காயம், தக்காளி, தேயிலை போன்றவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது. இந்தியாவானது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் கிட்டதட்ட 24 இலட்சம் கோடி ரூபாயை விவசாயத்தின் மூலம் பெறுவதாகப் புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன. இந்தியாவோடு ஒப்பிடுகையில் சீனா ஒரு மடங்கு அதிகமான நிலப்பரப்பில் விவசாயம் செய்து சற்றேறக்குறைய மூன்று மடங்கு அதிக வருவாயை ஈட்டுகின்றது. சீனாவின் இந்தப் பெரும் வளர்ச்சிக்கான அடிப்படை வேளாண் துறையின் நவீனமயமாக்கமும் அத்துறை சார்ந்து சீனா கொண்டுள்ள தொலைநோக்குப் பார்வையும் தான் என்றால் மிகையில்லை. சீனா, 2021ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள ஒன்றாம் எண் ஆவணத்தில் கூட விவசாயத்துறையில் 2025ஆம் ஆண்டு வரை செய்ய வேண்டிய விரிவான திட்டப் பணிகளைத் தொலைநோக்குப் பார்வையோடு முன்வைத்துள்ளதாகச் சீன வேளாண் மற்றும் ஊரகத் துறை அமைச்சர் டாங் ழென் ஜியன் கூறியிருப்பது கவனித்தக்கது. மேலும், வேளாண் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்களினால் தொடர்ந்து 17 ஆண்டுகளாகப் பெரும் அறுவடையைப் பெற்று வருவதாகவும் குறிப்பாக கடந்த ஆறு ஆண்டுகளில் சீனாவின் தானிய உற்பத்தி 650 பில்லியனைத் தாண்டியிருப்பாதாகவும்  டாங் ழென் ஜியன்  புள்ளிவிவரங்களோடு தெரிவிக்கின்றார்.வேளாண் துறை பெருமளவில் நவீனப்படுத்தப்பட்டு வரும் சீனாவில் வேளாண்மை மற்றும் அறுவடையின் போது 71 விழுக்காட்டுப் பணிகள் இயந்திரங்கள் மூலமாகவே நடைபெறுகின்றன. அதேவேளை, கடந்த நான்கு ஆண்டுகளாக பயிர்களின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டு அளவு குறைந்து வருவது சீன வேளாண்மை நவீனத் தொழில்நுட்பத்தோடு இயற்கை விவசாயம் நோக்கி முன்னேறி வருவதை எடுத்துக் காட்டுகின்றது.

 • மக்களின் வாழ்க்கை மீது அமெரிக்க அரசியல்வாதிகளின் பராமுகம்

  பிப்ரவரி 22ஆம் நாள் வரை அமெரிக்காவில் புதிய ரக கரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 5 இலட்சத்தைத் தாண்டியது.

 • வெளிநாடுகளுக்கு கரோனா தடுப்பூசியை பொதுப் பொருளாக வழங்கும் சீனா

  கரோனா தடுப்பூசியை உலகின் பொதுப் பொருளாக வழங்குவது பற்றிய வாக்குறுதியை சீனா நிறைவேற்றியுள்ளது.

 • பாரிஸ் உடன்படிக்கையில் மீண்டும் அமெரிக்கா

  பாரிஸ் உடன்படிக்கையில் அமெரிக்கா மீண்டும் சேருவது வரவேற்கத்தக்கது.

 • சீன-ஐரோப்பிய வர்த்தக அதிகரிப்பு

  2020ஆம் ஆண்டு அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி, ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா மாறியிருப்பது இதுவே முதல்முறையாகும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளிவிவரப் பணியகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது

 • சீனப்பொருளாதாரத்தின் உள்ளார்ந்த ஆற்றலை வெளிப்படுத்தியுள்ள வசந்த விழா விடுமுறை கால நுகர்வு

  இவ்வாண்டு நுகர்வு சீனப் பொருளாதாரத்துக்கு உயிராற்றலை ஊட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

 • சீனச் சமூகத்தின் உயர்வான நிர்வாக நிலையைக் காட்டும் வசந்த விழாவுக்கான சிறப்பு கொண்டாட்டம்

  கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சீன அரசின் ஆலோசனையை ஏற்று, இவ்வாண்டின் வசந்த விழா காலத்தில், பெருமளவிலான மக்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பவில்லை

 • சொந்த ஊருக்குத் திரும்பாத மக்களின் வசந்த விழா கொண்டாட்டம்

  வசந்த விழா, சீனாவின் மிக முக்கியமான விழாவாகும். சீனர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வசந்த விழாவைக் கொண்டாடுவது வழக்கம். ஆனால் இவ்வாண்டு கரோனா வைரஸ் தடுப்பு பணியின் காரணமாக, நிறைய சீனர்கள், தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல், பணி புரியும் நகரத்தில் வசந்த விழாவைக் கொண்டாடினர்.புள்ளிவிவரங்களின் படி, வசந்த விழாவுக்கு முன், சீனாவின் தொடர் வண்டி மற்றும் விமானத்தின் மூலம் பயணம் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது. இவ்வாண்டு சீனாவின் 36 பெரிய மற்றும் நடுநிலை நகரங்களில் சொந்த ஊருக்குத் திரும்பாத மக்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் இருந்ததை விட 4 கோடியே 80 இலட்சம் அதிகரித்துள்ளது.வசந்த விழா விடுமுறை காலத்திலும், பொது மக்களின் நிரந்தர வாழ்க்கையைப் பேணிக்காக்கும் வகையில், எரியாற்றல், போக்குவரத்து துறையினர்கள், விடுமுறையின்றி வேலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 • தனது செயலுக்கு உரிய விலை கொடுத்த பிபிசி

  பிபிசி நிறுவனம் தற்சோதனை செய்து, படிப்பினையைப் பெற்று, சீனா தொடர்பான போலி செய்தியறிக்கைக்கு வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

 • ஆக்கப்பூர்வமான சமிக்கையை வெளிப்படுத்தும் சீன-அமெரிக்கத் தலைவர்களின் தொடர்பு

  சீன-அமெரிக்கத் தலைவர்களின் இந்த தொடர்பில் ஏற்பட்ட ஒத்த கருத்துகளை அமெரிக்கா செயல்படுத்தி, சீனாவுடன் இணைந்து இரு நாட்டுறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

 • கரோனா வைரஸ் தோற்றம் பற்றிய ஆய்வுக்கு சர்வதேச ஒத்துழைப்பு தேவை

  புதிய ரக கரோனா வைரஸ் தோற்றம் பற்றிய சீனா-உலகச் சுகாதார அமைப்பின் ஆய்வுக்கூட்டம் பிப்ரவரி 9ஆம் நாள் வூஹான் நகரில் நடைபெற்றது. அப்போது, வெளிநாட்டுக் குழு தலைவர் பீட்டர் பென் எம்பரேக் கூறுகையில், ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து கரோனா வைரஸ் பரவியதற்கு வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில், இந்தக் கோணத்தில் ஆய்வு செய்வது தேவையில்லை என்றார்.கரோனா வைரஸ் தோற்றம் பற்றிய ஆய்வு குறித்து சீனா வெளிப்படையாக உள்ளது. உலகச் சுகாதார அமைப்பு தொடர்புடைய பணிகளை மேற்கொள்வதுடன் சீனா எப்போதுமே ஆக்கமுடன் ஒத்துழைப்பதில் முன்முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வைச் சீனா தடுப்பதாகக் கூறுவது முற்றிலும் நகைப்பிற்குரியது.2019ஆம் ஆண்டின் பிற்பாதியில், கரோனா வைரஸ் உலகத்தின் பல்வேறு இடங்களில் தோன்றியது என்ற செய்திகளை, இதுவரை மென்மேலும் அதிகமான செய்தி ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. கரோனா வைரஸ் தோற்றம் பற்றிய ஆய்வு இன்றியமையாததாகவும் அவசரமாகவும் உள்ளது என்று தற்போதைய சான்றுகள் காட்டுகின்றன.மேலும், பல்வேறு தரப்புகள் சீனாவுடன் இணைந்து, கரோனா வைரஸ் தோற்றம் பற்றிய ஆய்வில், ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு மனப்பாங்கைக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் உலகத்தில் கொள்ளை நோய் இடர்பாடுகளைக் குறைப்பதற்குப் பல்வேறு நாடுகள் கூட்டாகப் பங்காற்றுவதை எதிர்ப்பார்க்கின்றோம்.

 • சீன - மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய ஒத்துழைப்பு

  மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் வைரஸுக்கான இணைப்புத் தடுப்பு பற்றிய பரிமாற்றத்தை வலுப்படுத்தி, தடுப்பூசி ஒத்துழைப்புத் தேவையில் ஆக்கப்பூர்வ கவனம் செலுத்த சீனா விரும்புவதாகவும் இவ்வுச்சி மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 • சீன-அமெரிக்க உறவு விழிப்புடன் கையாளப்பட வேண்டும்

  அண்மையில், அமெரிக்காவின் புகழ் பெற்ற சிந்தனைக் கிடங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான எதிரெதிர் நிலைமையை தூண்டிவிட்டது. பைடனின் தூதாண்மை கொள்கையில் அமெரிக்காவின் பாதுகாப்பை சீனா அச்சுறுத்தும் என்று முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ கூறினார் இவை, சீன-அமெரிக்க உறவை முழுமையான மோதலுக்கு கொண்டு வர முயன்ற செயல்கள் இவற்றில் தொடர்புடைய நிபுணர்கள் கவனம் செலுத்த வேண்டும்.கடந்த 4 ஆண்டுகளில், அமெரிக்க அரசு செயல்படுத்திய சீனாவுக்கு எதிரான கொள்கைகள் தோல்வியில் தான் முடிந்தன. இவை அமெரிக்காவை தனிமைப்படுத்தியுள்ளன. அமெரிக்க வலது சாரி அமைப்பு அமெரிக்காவின் மிகப்பெரிய எதிரியாகும்.தற்போதைய உலகில், பனிப்போர், ஆயுதப் போர், வர்த்தகப் போர், தொழில்நுட்ப்ப் போர் ஆகியவை இருந்தாலும், உண்மையான வெற்றியாளர்கள் யாகும் இல்லை. சீன-அமெரிக்க உறவின் உண்மையான இலக்கு எந்த தரப்புக்கும் வெற்றி இல்லை. தொடரவல்ல வளர்ச்சி என்பதே ஆகும்.அமெரிக்காவின் புதிய அரசு சீனாவுடன் ஒத்துழைக்கும் விருப்பத்தை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி வருகிறது. சீன-அமெரிக்க உறவு புதிய கட்டத்தில் நுழைய வாய்ப்புண்டு இந்த முக்கிய நேரத்தில், இரு நாட்டுறவைக் கையள்வதில் அமெரிக்கா விழிப்புடன் செயல்பட வேண்டும்.

 • தப்பெண்ணத்தை கைவிடுவது பொதுவான போக்கு

  தப்பெண்ணத்தை கைவிடுவது, வேற்றுமைகளைக் கட்டுப்படுத்துவது, ஒத்துழைப்பில் கவனம் செலுத்துவது ஆகியவை மக்களின் விரும்பமும் பொதுவான போக்காகவும் உள்ளது.

 • கோவைட்-19 தடுப்பூசிகளின் செயல்பாட்டுத் திட்டத்தில் சீனா பங்களிப்பு

  வளரும் நாடுகள் நியாயமான முறையில் தடுப்பூசிகளைப் பெற்றால், அது, முழு உலகமும் தொற்று நோயைத் தோற்கடிப்பதற்கான திறவுக்கோலாகவும் உலகப் பொருளாதாரம் மீட்சி அடைவதற்கான பெரிய ஆதாரமாகவும் விளங்கும் என்று நம்புகின்றோம்.

 • சீனாவின் சின்சியாங் எப்படி உள்ளது?நேரில் பார்க்க வேண்டும்!

  அனைத்து நாடுகளுக்கும் பொருத்தமான வளர்ச்சிப் பாதை உலகில் இருக்காது. சமூகத்தின் வளர்ச்சி, மனித உரிமை பாதுகாப்பில் சீன அரசு மாபெரும் சாதனைகளை பெற்றுள்ளது என்று லாவோஸ் பிரதிநிதி கெய் தெரிவித்தார்.

 • பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி திட்டப்படி நடைபெறும்!

  6 ஆண்டுகளுக்கு முன்பு,  சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தாமஸ் பாச், 2022ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை நடத்தும் உரிமை பெய்ஜிங்கிற்கு கிடைப்பதாக அறிவித்த போது,  அது  நம்பகமானவரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார்.

 • சீன-அமெரிக்க உறவுக்கான சரியான திசை

  கடந்த 4 ஆண்டுகளாக மிகக் கடினமான காலகட்டத்தில் இருந்து வரும் சீன-அமெரிக்க உறவு, உலக அமைதி மற்றும் நிதானத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.