ஷி ச்சின்பீங்

ஷி ச்சின்பீங்

ஷி ச்சின்பீங், ஆண், ஹான் இனத்தவர். 1953ம் ஆண்டு ஜூன் திங்களில் பிறந்தார். ஷான்சி மாநிலத்தின் ஃபூபிங் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1969ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் பணி புரிய தொடங்கினார். 1974ம் ஆண்டின் ஜனவரி திங்களில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். ட்சிங்குவா பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் புலத்தில் மார்க்சிய தத்துவம் மற்றும் கருத்தியல் கல்வித்துறையில் பட்டம் பெற்றார். தவிரவும், அவர், முதுகலை பட்டமும் சட்டத்தில் முனைவர் பட்டமும் பெற்றவராவார்.

தற்போது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர், சீனக் கம்யூனிஸட் கட்சி மத்திய ராணுவக் கமிட்டித் தலைவர், சீன மக்கள் குடியரசின் தலைவர், சீன மக்கள் குடியரசின் மத்திய ராணுவ கமிட்டியின் தலைவர் ஆகிய பதவிகளை ஏற்றுள்ளார்.

1969-1975, ஷான்சி மாநிலத்தின் யன் ச்சுவான் மாவட்டத்தின் வென் அன் யி பகுதியின் லியாங் ஜியா ஹே அணியில் பணிபுரிந்த படித்த இளைஞர் மற்றும் இவ்வணியின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர்

1975-1979, ச்சிங்குவா பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையில் பயின்று பட்டம் பெற்றவராவார்

1979-1982, சீன அரசவையின் அலுவலகம் மற்றும் மத்திய ராணுவ கமிட்டி அலுவலகத்தின் செயலாளர்

1982-1983, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஹேபெய் மாநிலத்தின் ச்செங் டிங் மாவட்டக் குழுவின் துணைத் செயலாளர்

1983-1985, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஹேபெய் மாநிலத்தின் ச்செங் டிங் மாவட்டக் குழுச் செயலாளர், ச்செங் டிங் மாவட்ட ஆயுதப் படைப்பிரிவின் முதலாவது அரசியல் உறுப்பினர்

1985-1988, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஃபூச்சியான் மாநிலத்தின் சியா மன் நகரக் குழுவின் நிரந்தர உறுப்பினர், சியா மன் நகரின் துணைத் தலைவர்

1988-1990, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஃபூச்சியான் மாநிலத்தின் நிங் தே பிரதேச குழுச் செயலாளர், கட்சியின் நிங் தே ராணுவ பிரதேச குழுவின் செயலாளர்

1990-1993, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஃபூச்சியன் மாநிலத்தின் ஃபூச்சோ நகரின் குழுச் செயலாளர், ஃபூச்சோ நகரின் மக்கள் பேரவைத் தலைவர், கட்சியின் ஃபூச்சோ ராணுவப் பிரதேசக் குழுவின் முதலாவது செயலாளர்

1993-1995, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஃபூச்சியன் மாநிலத்து குழுவின் நிரந்தர உறுப்பினர், கட்சியின் ஃபூச்சோ நகரின் குழுச் செயலாளர், ஃபூச்சோ நகரின் மக்கள் பேரவைத் தலைவர், கட்சியின் ஃபூச்சோ ராணுவப் பிரதேசத் குழுவின் முதலாவது செயலாளர்

1995-1996, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஃபூச்சியன் மாநிலக் குழுவின் துணைச் செயலாளர், கட்சியின் ஃபூச்சோ நகரின் குழுச் செயலாளர், ஃபூச்சோ நகரின் மக்கள் பேரவைத் தலைவர், கட்சியின் ஃபூச்சோ ராணுவப் பிரதேசக் குழுவின் முதலாவது செயலாளர்

1996-1999, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஃபூச்சியன் மாநிலக் குழுவின் துணைச் செயலாளர், ஃபூச்சியன் மாநிலத்து பீரங்கி ஆயத்தப்படைப் பிரிவின் முதலாவது அரசியல் உறுப்பினர்

1999-2000, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஃபூச்சியன் மாநிலக் குழுவின் துணைச் செயலாளர், மாநிலத் தலைவர், நன் ஜிங் ராணுவ பிரதேசத்தின் தேசியப் பாதுகாப்பு அணிதிரட்டல் கமிட்டியின் துணைத் தலைவர், ஃபூச்சியன் மாநிலத்தின் தேசியப் பாதுகாப்பு அணி திரட்டல் கமிட்டித் தலைவர், ஃபூச்சியன் மாநில பீரங்கி ஆயத்தப் படைப் பிரிவின் முதலாவது அரசியல் உறுப்பினர்

2000-2002, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஃபூச்சியன் மாநிலக் குழுவின் துணைச் செயலாளர், மாநிலத் தலைவர், நன் ஜிங் ராணுவப் பிரதேச தேசியப் பாதுகாப்பு அணி திரட்டல் கமிட்டியின் துணைத் தலைவர், ஃபூச்சியான் மாநிலத்தின் தேசியப் பாதுகாப்பு அணி திரட்டல் கமிட்டித் தலைவர், ஃபூச்சியான் மாநிலத்து பீரங்கி ஆயத்தப் படைப் பிரிவின் முதலாவது அரசியல் உறுப்பினர்

2002, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ச்சேச்சியாங் மாநிலக் குழுவின் துணைச் செயலாளர், மாநிலத்தின் தற்காலிகத் தலைவர், நன் ஜிங் ராணுவ பிரதேச தேசியப் பாதுகாப்பு அணி திரட்டல் கமிட்டியின் துணைத் தலைவர், ச்சேச்சியாங் மாநிலத்தின் தேசியப் பாதுகாப்பு அணி திரட்டல் கமிட்டித் தலைவர்

2002-2003, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ச்சேச்சியாங் மாநிலக் குழுச்செயலாளர் மாநிலத்தின் தற்காலிகத் தலைவர், கட்சியின் ச்சேச்சியாங் ராணுவப் பிரதேசக் குழுவின் முதலாவது செயலாளர், நன் ஜிங் ராணுவப் பிரதேச தேசியப் பாதுகாப்பு அணி திரட்டல் கமிட்டியின் துணைத் தலைவர், ச்சேச்சியாங் மாநிலத்தின் தேசியப் பாதுகாப்பு அணி திரட்டல் கமிட்டித் தலைவர்

2003-2007, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ச்சேச்சியாங் மாநிலக் குழுச் செயலாளர், மாநில மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டியின் தலைவர், கட்சியின் ச்சேச்சியாங் ராணுவப் பிரதேசக் குழுவின் முதலாவது செயலாளர்

2007-2007, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஷாங்காய் மாநகரக் குழுச் செயலாளர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஷாங்காய் காவற்படை பிரதேச குழுவின் முதலாவது செயலாளர்

2007-2008, சீனக் கம்யூனி்ஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி செயலகத்தின் செயலாளர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கட்சி கல்லூரி வேந்தர்

2008-2010, சீனக் கம்யூனி்ஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழு நிரந்தர உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி செயலகத்தின் செயலாளர், சீன மக்கள் குடியரசின் துணை தலைவர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கட்சி கல்லூரியின் வேந்தர்

2010-2012, சீனக் கம்யூனி்ஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி செயலகத்தின் செயலாளர், சீன மக்கள் குடியரசின் துணைத் தலைவர், மத்திய ராணுவ கமிட்டியின் துணைத் தலைவர், சீன மக்கள் குடியரசின் மத்திய ராணுவ கமிட்டியின் துணைத் தலைவர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கட்சி கல்லூரியின் வேந்தர்

2012-2013, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டி பொதுச் செயலாளர், மத்தியக் ராணுவக் கமிட்டித் தலைவர், சீன மக்கள் குடியரசின் துணைத் தலைவர், சீன மக்கள் குடியரசின் மத்திய ராணுவ கமிட்டியின் துணைத் தலைவர்

2013 முதல் இதுவரை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர், மத்திய ராணுவக் கமிட்டித் தலைவர், சீன மக்கள் குடியரசின் தலைவர், சீன மக்கள் குடியரசின் மத்திய ராணுவ கமிட்டித் தலைவர்

சீன கம்யூனிஸ்ட் கட்சி 15ஆவது மத்திய கமிட்டியின் தற்காலிக உறுப்பினர், 16, 17, 18 மற்றும் 19ஆவது மத்திய கமிட்டியின் உறுப்பினர், 17ஆவது மத்திய அரசியல் குழுவின் உறுப்பினர், நிரந்தர உறுப்பினர், மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர்

சீனாவின் 11ஆவது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத்தொடரில் ஷி ச்சின்பிங் சீன மக்கள் குடியரசின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 17ஆவது மத்திய கமிட்டியின் 5வது முழு அமர்வில் மத்திய ராணுவ கமிட்டியின் துணைத் தலைவராகப் பதவியேற்றார்.

சீனாவின் 11ஆவது தேசிய மக்கள் பேரவையின் 17ஆவது கூட்டத்தொடரில் சீன மக்கள் குடியரசின் மத்திய ராணவ கமிட்டியின் துணைத் தலைவராக பதவியேற்றார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது மத்திய கமிட்டியின் முதலாவது முழு அமர்வில் சீன மக்கள் குடியரசின் மத்திய ராணுவ கமிட்டித் தலைவராகப் பதவியேற்றார். சீனாவின் 12ஆவது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத்தொடரில் சீன மக்கள் குடியரசுத் தலைவராகவும், மத்திய ராணுவக் கமிட்டியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது மத்திய கமிட்டியின் முதலாவது முழு அமர்வில் இவர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய ராணுவ கமிட்டியின் தலைவராகப் பதவியேற்றார்.