லீ க்கெச்சியாங்

லீ க்கெச்சியாங்

லீ க்கெச்சியாங், ஆண், ஹான் இனத்தைச் சேர்ந்தவர். 1955ஆம் ஆண்டின் ஜுலை திங்களில் பிறந்தார். ஆன்ஹூய் மாநிலத்தின் தின்யூவான் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1974ஆம் ஆண்டு மார்ச் திங்களில் பணிபுரியத் தொடங்கினார். 1976ஆம் ஆண்டின் மே திங்களில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். பீக்கிங் பல்கலைக்கழகத்தின் சட்டவியல் துறையிலும் பொருளாதாரப் புலத்தின் பொருளியல் துறையிலும் பட்டம் பெற்றார். இவர் முதுகலை பட்டம், சட்டவியல் பட்டம், பொருளியல் முனைவர் பட்டம் ஆகியவற்றைப் பெற்றவராவார்.

தற்போது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீன அரசவையின் தலைமையமைச்சர் மற்றும் கட்சிக் குழுவின் செயலாளரும் ஆவார்.

1978-1982, பீகிங் பல்கலைக்கழகத்தின் சட்டவியல் துறையில் பயின்று, மாணவர் சங்கத்தின் பொறுப்பாளர்.

1993-1998, சீனக் கம்யூனிஸ்ட் இளைஞர் லீகின் மத்திய கமிட்டி செயலகத்தின் முதன்மைச் செயலாளர், சீன இளைஞர் அரசியல் கல்லூரியின் தலைவர்

1998-1999, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஹேனான் மாநிலக் குழுவின் துணைச் செயலாளர், மாநிலத்தின் தற்காலிகத் தலைவர்

1999-2002, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஹேனான் மாநிலக் குழுவின் துணைச் செயலாளர், மாநிலத் தலைவர்

2002-2003, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஹேனான் மாநிலத்தின் குழுச் செயலாளர், மாநிலத் தலைவர்

2003-2004, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஹேனான் மாநிலத்தின் குழுச் செயலாளர், மாநில மக்கள் பேரவையின் நிரந்தர குழுத் தலைவர்

2004-2005, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் லியௌ நிங் மாநிலக் குழுச் செயலாளர்

2005-2007, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் லியௌ நிங் மாநிலக் குழுச் செயலாளர், மாநில மக்கள் பேரவையின் நிரந்தரக் குழு தலைவர்

2007-2008, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர்

2008-2013, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர், சீனாவின் துணைத் தலைமையமைச்சர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசவைக் குழுவின் துணைச் செயலாளர்

2013-இதுவரை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர், சீனாவின் தலைமையமைச்சர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசவைக் குழுவின் செயலாளர்

இவர், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 15, 16, 17, 18 மற்றும் 19ஆவது மத்திய கமிட்டியின் உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 17, 18 மற்றும் 19ஆவது மத்திய அரசியல் குழுவின் உறுப்பினர் மற்றும் நிரந்தர உறுப்பினர், சீனத் தேசிய மக்கள் பேரவையின் 8ஆவது நிரந்தர குழுவின் உறுப்பினர் முதலிய பதவிகளை ஏற்றுள்ளார்.